தயாநிதிமாறன் 2004 முதல் 2007 வரை மத்திய தொலைத் தொடர்பு மந்திரியாக இருந்தார். அப்போது, தயாநிதி மாறன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி “ஏர்செல்” நிறுவனத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனமான மேக்ஸிஸ்-க்கு விற்பனை செய்யும்படி நெருக்கடி கொடுத்தார் என்று ஏர்செல் நிறுவனத்தின் அதிபராக இருந்த சிவசங்கரன் 2011-ம் ஆண்டு சி.பி.ஐ.யிடம் புகார் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் தயாநிதிமாறன் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். ஏர்செல் பங்குகளை மேக்ஸிஸ் வாங்கியதன் மூலம் தயாநிதி மாறனும், கலாநிதி மாறனும் ஆதாயம் அடைந்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.
ஏர்செல் பங்கு விற்பனையின் மூலம் ஆதாயம் அடைந்த மேக்ஸிஸ் நிறுவனம் ரூ.550 கோடி அளவுக்கு சட்ட விரோதமாக பண பரிவர்த்தனை நடந்தது. இது சன் டி.வி.யில் மறைமுகமாக முதலீடு செய்யப்பட்டது என்று குற்றச்சாட்டில் கூறப்பட்டது.
கலாநிதி மாறன், தயாநிதி மாறன் மேக்ஸிஸ் நிறுவனத்தை சேர்ந்த ரால்ப் மார்ஷல் ஆகியோரது சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. சி.பி.ஐ. இயக்குனர் அமர்பிரதாப்சிங் கடந்த 24-ந்தேதி 2ஜி ஸ்பெக்ட்ரம் விசாரணை தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு முன்பு ஆஜர் ஆனார். அப்போது தயாநிதிமாறன் மீது பதிவு செய்த வழக்கின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்டு எம்.பி. குருதாஸ் குப்தா, சி.பி.ஐ. இயக்குனரிடம் தயாநிதி மாறனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ. தயக்கம் காட்டுகிறதா என்று கேள்விஎழுப்பினார். அதற்கு அவர் “மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கிடையே கலாநிதி மாறன், தயாநிதிமாறன் ஆகியோரிடம் மீண்டும் சி.பி.ஐ. அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது சிவசங்கரன் அளித்த புகார் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்வி கேட்டனர். அதற்கு 2 பேரும் பதில் அளித்தார்கள். அதிகாரிகள் கேட்ட சில ஆவணங்களையும் கொடுத்தனர்.
அவர்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment