லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில் அணிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய அணி உடன் மர்மப்பெண் ஒருவர் நடந்து வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று அதிகாலையில் 1.30 மணிக்கு நடைபெற்ற துவக்க விழா உடன் கோலாகலமாக துவங்கியது. இதில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், அணிகளின் அணிவகுப்பு, வாணவேடிக்கை, இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி என்று பல நிகழ்ச்சிகள் அரங்கேறியது.
இதில் அணிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் மல்யுத்த வீரர் விரேந்தர் சிங் தேசிய கொடியை ஏந்தி செல்ல மற்ற இந்திய வீரர்கள் கொடியின் கீழ் நடந்து வந்தனர். அணிவகுப்பின் போது, இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் அனைவரும் கருப்பு நிற கோர்ட் அணிந்து கொண்டு, தலையில் மஞ்சள் நிற தலைபாகை உடன் நடந்து வந்தனர்.
அதேபோல இந்திய வீராங்கனைகள் அனைவரும் மஞ்சள் நிற சேலை அணிந்து கொண்டு நடந்து வந்தனர். அப்போது இந்திய அணியில் சிவப்பு நிற சர்ட், நீல நிற பேண்ட் அணிந்து ஒரு மர்மப்பெண் நடந்து வந்தார். அவர் யார் என்பது குறித்து தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியினருக்கு இவர் யார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய அணியை தலைமை வகித்து நடத்தி சென்ற முரளிதரன் ராஜாவிற்கும் இந்த மர்மப் பெண் யார் என்பது தெரியவில்லை.
இது குறித்து அவர் கூறியதாவது,
இந்திய அணியுடன் நடந்து வந்த அந்த பெண் யார் என்று தெரியவில்லை. இது குறித்து நாங்கள் ஒலிம்பி்க் போட்டியின் ஒருங்கிணைப்பாளர்களிடம் பேசி உள்ளோம். இந்திய அணியுடன் அவர் நடந்து வர யார் அனுமதி அளித்தார் என்று தெரியவில்லை. இந்திய அணியின் வீரர்கள், வீராங்கனைகள் உடன், அந்த மர்ம பெண் நடந்து வந்தது அணிக்கே பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது.
அணிவகுப்பில் இந்திய அணியுடன் அந்த பெண்ணும், மற்றொரு நபரும் நடந்து வருவதாக இருந்தது. ஆனால் அவர்களை அணிவகுப்பு களத்திற்குள் வர கூடாது என்று கூறியிருந்தேன். இதையடுத்து அந்த நபர் அணிவகுப்பிற்கு வரவில்லை. ஆனால் எங்களின் தடையும் மீறி மர்ம பெண் மட்டும் வந்துள்ளார்.
ஒலிம்பிக் அணிவகுப்பில், போட்டிகளில் பங்கேற்க உள்ள வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஆனால் இந்திய அணிவகுப்பு முழுவதும் அந்த பெண் நடந்து வந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது என்றார்.
No comments:
Post a Comment