பொதுவாக கம்யூனிஸ்ட்களை குறிப்பிட காம்ரேட் என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர். சீனாவில் ஓரினச் சேர்க்கையாளர்களையும் காம்ரேட் என்றே குறிப்பிடுகின்றனர். ஓரின சேர்க்கை யாளர்களை குறிக்கும் காம்ரேட், டாங்ஸி என்ற சொற்களை அகராதிகளில் இருந்து நீக்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வார்த்தைகளை நீக்கிவிட்டதாக கான்டம்பரரி சைனீஸ் டிக்ஷனரி உள்பட அகராதி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதுகுறித்து மொழி வல்லுனர்கள் கூறுகையில், அகராதியில் நல்ல சொற்களும் உண்டு. தீய சொற்களும் உண்டு.
அதற்காக தீய சொற்களை நீக்குவது நல்லதல்ல. அவை மொழியின் அம்சம். அகராதியில் இருந்து நீக்கினால் மக்கள் உச்சரிக்காமல் இருப்பார்களா? மக்கள் வழக்கத்தில் இருந்து அவ்வளவு சீக்கிரம் நீக்கிவிட முடியாது என்று கூறுகின்றனர். உலகில் பரவலாக ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் கிடைத்து வரும் நிலையில், இந்த சொல்லை அகராதியில் இருந்து நீக்குவது சரியல்ல என்று ஓரினச் சேர்க்கையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment