நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிரணாப், இன்று பணியைத் தொடங்கினார். முதல் நாள் பணியின்போது தனது அலுவலக அதிகாரிகளை சந்தித்தார். பணி ஓய்வில் செல்ல உள்ள செயலாளர் கிறிஸ்டி பெர்னாண்டசும் இந்த சந்திப்பின்போது கலந்துகொண்டார்.
ஜனாதிபதியின் அழைப்பின்பேரில் இன்று காலை தமிழ்நாடு ஆளுநர் ரோசய்யா, மத்திய பிரதேச ஆளுநர் ராம் நரேஷ் யாதவ், உத்தர பிரதேச ஆளுநர் பி.எல்.ஜோஷி ஆகியோர் அவரை சந்தித்தனர்.
பிற்பகல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆயுதப்படை தளபதி ஆகியோர் சந்தித்தனர். அதன்பின்னர் பஞ்சாப், நாகலாந்து, உத்தரகாண்ட் மற்றும் மேகாலயா மாநில ஆளுநர்கள் மாலையில் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார்.
No comments:
Post a Comment