ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு நாடான துபாயில் நடந்து வருகிறது. இவ்விரு அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இரு அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இத்தொடரின் முதல் போட்டி துபாயில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஹபீஸ் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியினர் ஆரம்பத்திலிருந்தே பாகிஸ்தான் வீரர்களின் அபார பந்துவீச்சால் தடுமாறினர். நேர்த்தியாகப் பந்துவீசிய பாகிஸ்தான் வீரர்களை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் சீரான இடைவெளிகளில் தங்கள் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவர்களிலேயே வெறும் 89 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அந்த அணியின் வார்னர் 22 ரன்னும், கேப்டன் பெய்லி 14 ரன்னும், ஒயிட் 15 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. பாகிஸ்தான் தரப்பில் தன்வீர் 3 விக்கெட்டும், அஜ்மல், ஹபீஸ், ராசா ஹசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர். 20 ஓவர் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். 2005-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 79 ரன்களில் சுருண்டதே 20 ஓவர் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.
அதன்பின்னர் 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்களும் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். எனினும் குறைவான இலக்கு என்பதால் பாகிஸ்தான் அணியின் வெற்றியை ஆஸ்திரேலிய வீரர்களால் தடுக்க இயலவில்லை. முடிவில் பாகிஸ்தான் அணி 14.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கம்ரான் அக்மல் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது 20 ஓவர் போட்டி நாளை நடக்கிறது.

No comments:
Post a Comment