கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பாளர்கள் நடத்திய முற்றுகை போராட்டம் நேற்று கலவரமாக வெடித்தது. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகள் வீசியும் கூட்டத்தை கலைத்தனர். அப்போது போராட்டக்காரர்களும் திருப்பி தாக்கினர். இதில் ஏராளமான போலீஸ்காரர்களும், எதிர்ப்பாளர்களும் காயமடைந்தனர்.
இடிந்தகரையில் நடந்த மோதலில் நெல்லை மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த 20 பெண் போலீசார் காயம் அடைந்தனர். 12-வது பட்டாலியன் 'இ' கம்பெனியைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் ரேணுகாதேவி, முத்துலெட்சுமி, பி.சந்தனமாரி, முருக லெட்சுமி, ஆர்.சந்தனமாரி, சீதாலெட்சுமி, முத்துக்குமாரி, கலைவாணி, தேவிகா, பொன் மாரியம்மாள் மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 'டி' கம்பெனியை சேர்ந்த சண்முகப்பிரியா, ஆதிலெட்சுமி, அனிதா, ரேவதி, முத்துமாரியம்மாள், பாண்டிச்செல்வி, கலைச்செல்வி, முனீஸ்வரி, உமா மகேஸ்வரி, கரோலின் ரூத் ஆகியோருமாக 20 பேரும் போராட்டக்காரர்கள் தாக்கியதில் காயமடைந்து ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கோவை அதிரடிப் படையை சேர்ந்த பிரதீஸ் உள்பட 2 போலீஸ்காரர்கள் படுகாயங்களுடன் ஆசாரிப் பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கதிரவன், விஸ்வநாதன் உள்பட 5 போலீஸ்காரர்கள் படுகாயத்துடன் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

No comments:
Post a Comment