கூடங்குளத்தில் நாளை நடைபெறும் முற்றுகை போராட்டத்தில் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழப்பு நேர்ந்தால் அவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்காக 32 பேர் கொண்ட நிதிக்குழு அமைத்துள்ளனர்.
இந்த தகவலை இடிந்தகரை, கூத்தங்குழி, கூட்டப்புளி உள்ளிட்ட கடற்கரையோர கிராமங்களில் நேற்று தண்டோரா மூலம் அறிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு கேட்டு பல இளைஞர்கள் உயிரை கொடுத்து அணு உலையை தடுப்போம் என்று கோஷம் போட்டனர். இதனால் கூடங்குளம் பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கடல் வழியாக படகுகளில் இடிந்தகரை வருகை
நாளை நடைபெறும் முற்றுகை போராட்டத்துக்காக நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட கடற்கரையோர கிராம மக்கள் ஏராளமானோர் படகுகள் மூலம் இடிந்த கரைக்கு வந்த வண்ணம் உள்ளனர். பஸ்கள் மற்றும் வாகனங்களில் இடிந்த கரைக்கு செல்பவர்களை கடந்த 2 நாட்களாக தடை செய்துள்ளதால் இன்று படகுகள் மூலம் பலர் வந்த வண்ணம் உள்ளனர்.
அப்ப அமெரிக்கா,இங்கிலாந்துலேர்ந்து வந்துடுச்சா ....????சொல்லவே இல்ல...????
ReplyDelete