போராட்டக்காரர்கள் முற்றுகை அறிவிப்பு தொடர்ந்து கூடங்குளத்தில் 7 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோர்ட் உத்திரவையடுத்து கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முற்றுகை போராட்டம் நடத்த போவதாக போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து கூடங்குளத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே அணுமின் நிலையத்தை சுற்றி 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு '144 தடை' உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் 5 பேருக்கு மேல் மொத்தமாக செல்ல கூடாது என்றும் மீறி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் செல்வராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இதை மீறி போராட்டக்காரர்கள் கடல் வழியாக படகுகள் மூலம் இடிந்தகரைக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்த முற்றுகை போராட்டத்தை முறியடிக்க கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிச்சினை ஏற்படாமல் சமாளிக்கவும் தமிழக போலீஸ் டி.ஜி.பி. உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் இருந்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கூடங்குளத்தில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் இருந்து சிறப்பு காவல்படையை சேர்ந்த 26 கம்பெனி போலீசார், மாநில அதிவேக அதிரடிப்படை போலீசார் 4 கம்பெனிகள், மத்திய அதிவேக அதிரடிப்படை போலீசார் 6 கம்பெனிகள், மத்திய ஆயுதப்படை மற்றும் தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த 15 கம்பெனிகள் மற்றும் நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்ட லோக்கல் போலீசார்களும் கூடங்குளத்தில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
நெல்லை சரக டி.ஐ.ஜி. வரதராஜு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி, கூடுதல் சூப்பிரண்டு மகேந்திரன் ஆகியோர் கடந்த 2 நாட்களாக கூடங்குளத்திலேயே முகாமிட்டுள்ளனர்.
நாளை காலை தென் மண்டல ஐ.ஜி. ராஜேஷ் தாஸ் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் பலரும் கூடங்குளம் வருகிறார்கள். கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி கண்ணீர் புகை குண்டு வீசும் வஜ்ரா வாகனம், தண்ணீரை பீய்ச்சி அடித்து கூட்டத்தை விரட்டும் வருண் வாகனங்கள், ஏ.கே.47 எந்திர துப்பாக்கிகளுடன் கூடிய வாகனங்கள் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன.
கடல் வழியாக கூடங்குளம் அணுமின் நிலையத்திற்குள் வருவதை தடுக்க கடலோர காவல் படையினர் படகுகள் மூலம் சுற்றி நிறுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள். கடலோர காவல்படை கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமைதியான முறையில் போராட்டக்காரர்களை கையாள போலீசார் முடிவு செய்துள்ளனர். பெரிய அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.
ஆனால் இதையும் மீறி போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கினால் துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை கட்டுப்படுத்தவும் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.

No comments:
Post a Comment