கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த முற்றுகை போராட்டத்தில் பயங்கர மோதல் வெடித்தது. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.
போலீஸ் படையினர் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்று கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் கூடங்குளம், இடிந்தகரை பகுதியில் இன்று 3-வது நாளாக பதட்டம் நீடிக்கிறது.
போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், தலைவர் புஷ்பராயன், நிர்வாகிகள் முகிலன், மைபா ஜேசுராஜன் மற்றும் கலவரத்தில் ஈடுபட்ட வர்களை கைதுசெய்ய போலீசார் கடந்த 2 நாட்களாக இடிந்தகரை, கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சோதனை நடத்தினர். இதில் தாக்குதல் நடத்திய 51 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த உதயகுமார், புஷ்பராயன், முகிலன், மைபா ஜேசுராஜன் ஆகியோரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் உதயகுமார் அரசியல் பிரமுகர் ஒருவர் முன்னிலையில் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் (நேற்று இரவு) சரணடைவதாக தெரிவித்தார். ஆனால் இதற்கு இடிந்தகரை பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் உதயகுமார் நேற்று மாலை திடீரென இடிந்தகரை உண்ணாவிரத பந்தலுக்கு வந்தார். நிருபர்களுக்கு பேட்டியளித்த பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உருக்கமாக பேசினார்.
அப்போது ஆண்களும், பெண்களும் கதறி அழுது உங்களை கைதாக விடமாட்டோம் என்று கூறினர். இந்த சமயத்தில் உதயகுமாரை கைது செய்ய அதிரடிப்படை போலீசார் இடிந்தகரை நோக்கி கடற்கரை வழியாக பதுங்கி, பதுங்கி சென்றனர்.
இதனை அறிந்த இளைஞர்கள் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த உதயகுமார் மற்றும் புஷ்பராயன், முகிலன் ஆகியோரை குண்டு கட்டாக தூக்கி சென்றனர். கடற்கரையில் தயாராக நிறுத்தி வைத்திருந்த 4 படகுகளில் அவர்களை ஏற்றி நடுக்கடலுக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
படகுகளில் நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்ட உதயகுமார், புஷ்பராயன், முகிலன் ஆகியோர் நேற்று நள்ளிரவில் இடிந்தகரை அருகே உள்ள கூத்தங்குழி மீனவர் கிராமத்துக்கு திரும்பினர். அங்கு அவர்கள் ரகசிய இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனை அறிந்த போலீசார் அவர்களை கைது செய்வதற்காக கூத்தங்குழி கிராமத்தை முற்றுகையிட்டுள்ளனர். போலீசார் ஊருக்குள் புகுவதை தடுக்க கூத்தங்குழி கிராம மக்கள் ஊரை சுற்றிலும் மணல் பரப்பில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வலைகளையும் புதைத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே கூத்தங்குழி கிராமத்துக்குள் நுழைய போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அத்துமீறி நுழைந்தால் இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்படும் என்பதால் உதயகுமார் உள்ளிட்டோரை எவ்வாறு கைது செய்வது என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ் ஐ.ஜி.க்கள் கண்ணப்பன், ராஜேஷ்தாஸ், இடிந்தகரை வந்துள்ள அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தொடர்பு கொண்டு உதயகுமாரை போலீஸ் நிலையத்திலோ அல்லது கோர்ட்டிலோ சரணடைய வைக்க அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு கெஜ்ரிவால் என்ன பதில் சொன்னார் என்று தெரியவில்லை.
இதனிடையே உதயகுமார் இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட கடலோர பகுதிகளில் உள்ள ஏதாவது ஒரு காவல் நிலையத்தில் கைது ஆகலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து கடலோர காவல்நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இடிந்தகரை பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

No comments:
Post a Comment