முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவை தொடர்ந்து, சென்னை வந்திருந்த இலங்கை கால்பந்து வீரர்களை திருப்பி அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி சென்னையில் உள்ள கியூபிராஞ்ச் போலீசார் நேற்று மாலை இலங்கை வீரர்கள் 10 பேரையும் பலத்த பாதுகாப்புடன் சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு முனையத்தில் இருந்து நேற்று மாலை 6.30 மணிக்கு கொழும்பு சென்ற விமானத்தில் அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment