மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசை பலப்படுத்த ராகுல் காந்திக்கு முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
ராகுல் காந்தி, பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவதை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக பிரதமர் மன்மோகன்சிங் பல சந்தர்ப்பங்களில் பேட்டி அளித்துள்ளார்.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தின் இளம் முதல்வர் என அழைக்கப்படும் அகிலேஷ் யாதவ், ராகுல் காந்திக்கு பெரிய பொறுப்பு தருவதில் காலம் தாழ்த்த கூடாது என்று கூறியுள்ளார். இதுபற்றி அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வருமாறு:-
ராகுல் காந்திக்கு காங்கிரஸ் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும். இதில் தாமதம் செய்யக்கூடாது. கூடிய விரைவில் அவர் மிகப்பெரிய பொறுப்பினை ஏற்க வேண்டும்.
அவர் பொறுப்புக்கு வருவதை நாட்டு மக்கள் எதிர்பார்க்கினர். கட்சியின் தலைமை காலம் தாழ்த்தாமல் இளம்தலைவரான அவருக்கு பெரிய பொறுப்பை வழங்க வேண்டும் இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
உத்தர பிரதேச சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், பாரதீய ஜனதா ஆகிய 4 கட்சிகளும் தனித்து போட்டியிட்டன. இதில் சமாஜ்வாடி கட்சி ஆட்சியைப் பிடித்து அகிலேஷ்யாதவ் முதல்- மந்திரி ஆனார்.
தற்போது மத்திய அரசுக்கு சமாஜ்வாடி கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment