மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு விதித்த மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உறுதி செய்தது. அதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள குண்டுகள் துளைக்க முடியாத பாதுகாப்பான ஒரு முட்டை வடிவிலான சிறையில் பத்திரமாக அவன் வைக்கப்பட்டுள்ளான்.
மரணதண்டனை குறித்த உறுதிபடுத்தப்பட்ட தீர்ப்பு நகலில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் அவன் கையெழுத்திட்டு உள்ளான். அதன் ஒரு மாதிரி நகல் அவனுக்கும் மற்றொரு மாதிரி நகல் உச்ச நீதிமன்றத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அவனுக்கு மரணதண்டனை தீர்ப்பு குறித்த நகலை அதிகாரிகள் அவனிடம் கொடுத்தனர். அப்போது அவனிடம் மரணதண்டனை குற்றவாளியான உனக்கு அதிலிருந்து விடுதலை பெற ஜனாதிபதிக்கு கருணை மனு வழங்கும் உரிமை இருக்கிறது என்று எடுத்து கூறினர்.
அதற்கு அவன் எதும் பதிலளிக்காமல் மவுனமாக இருந்துவிட்டான் என்று கூறப்படுகிறது. மரண தண்டனையிலிருந்து விடுதலை வேண்டி கசாப் விண்ணப்பித்தால் அதிகுறித்து உடனடியாக பரிசீலிக்கப்படும் என்று உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே முன்பு கூறியிருந்தார்.
No comments:
Post a Comment