அரசு வேலைகளில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழக்கும் மசோதா நேற்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த முயற்சிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளில் ஒன்றான சிவசேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜாதி மற்றும் மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எப்போதும் எதிர்ப்போம் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதுபற்றி பேசிய அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரவுத், ‘நீண்டகாலமாக நாங்கள் ஜாதி மற்றும் மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எதிர்த்து வருகிறோம். இது ஓட்டு வங்கி அரசியலுக்காக அல்ல. சமூக நீதிக்காகவே நாங்கள் இந்நிலையைக் கொண்டுள்ளோம். மதம் மற்றும் ஜாதி அடிப்படையில் யாருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என்பதே சிவசேனாவின் நிலை. தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள இட ஒதுக்கீடு சமூக நீதிக்கும், தகுதி வாய்ந்தவர்களுக்கும் எதிரானது. இது அராஜகத்திற்கு வழிவகுக்கும். எனவே நாங்கள் இதனை எப்போதும் எதிர்ப்போம்’ என்றார்.
சிவசேனா தலைவர் தாக்கரேவின் குடும்பம் பீகாரிலிருந்து, மும்பைக்கு இடம் பெயர்ந்ததாக காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளது பற்றிய கேள்விக்கு, ‘திக்விஜய்க்கு காங்கிரஸ் தலைமை தற்போது ஆராய்ச்சி பணியை அளித்துள்ளதா?’ என ரவுத் கேள்வி எழுப்பினார். மேலும் திக்விஜய் எப்போதும் பொய் பேசுபவர் எனவும், தற்போது தாக்கரே குடும்பம் பற்றி அவர் பொய் கூறுவதாகவும் ரவுத் விமர்சித்துள்ளார்.
திக்குவாய் சிங் ஒரு அரைலூசு அந்தாளை ஒரு பொருட்டாக யாரும் நினைக்கவேண்டாம்
ReplyDelete