வேலை செய்யும் இடங்களில் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் நேற்று பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
பணிபுரியும் பெண்களுக்கு மட்டுமல்லாமல், இல்லத்தரசிகளும் பயன்பெறும் வகையில், புதிய மசோதா விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு அவர்களின் கணவன்மார்கள் மாதச் சம்பளம் வழங்குவதை கட்டாயமாக்கும் வகையிலான இந்த புதிய மசோதாவை மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டுத்துறை அமைச்ககம் தயாரித்து வருகிறது.
இதுபற்றி அமைச்சர் கிருஷ்ணா தீரத் கூறுகையில், பெண்களின் முன்னேற்றத்தை நோக்கமாக கொண்டு மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வீட்டில் அன்றாட பணிகளை செய்யும் மனைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் நிலையான மாதச் சம்பளம் வழங்குவதற்கு மசோதா தயாரிக்கப்பட்டு வருகிறது.பெண்களுக்கான மாதச் சம்பளத்தை அரசே நிர்ணயிக்கும்’என்றார்.
மேலும் இந்த மசோதா தயாரான 6 மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அமைச்சர் தீர்த் கூறினார்.
இந்த மசோதாவின்படி, கணவன்மார்கள் தங்களது மாதச் சம்பளத்தில் 10 முதல் 20 சதவீதம் வரை மனைவியின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment