அதிக எரிசக்தி திறன் கொண்ட இந்தோனேசிய நிலக்கரியை கன்வேயர் பெல்டில் கொண்டு சென்றதே தூத்துக்குடி அனல் மின் நிலைய தீ விபத்துக்கு காரணம் என அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு துறைமுகத்தில் இருந்து நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெட்டில் கடந்த ஜூலை மாதம் 2, 16 ஆகிய தேதிகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரூ.15 கோடியே 25 லட்சம் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் அடங்கிய குழுவை தூத்துக்குடி கலெக்டர் ஆசிஷ்குமார் நியமித்தார்.
இந்நிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நேற்று முன்தினம் 3வது யூனிட்டுககு இடையேயான கன்வேயர் பெல்டில் தீப்பிடித்தது. இதில் மின் வயர்கள், கன்வேயர் பெல்ட், இரும்பு கோபுரங்கள் சேதமடைந்தன.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2வது மற்றும் 3வது யூனிட்கள் துவங்கி 30 ஆண்டுகள் ஆவதால் அந்த யூனிட்களின் கன்வேயர் பெல்ட்கள் தரம் குன்றிவிட்டன. ஆனால் இது குறித்து அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும், அதுவே தீ விபத்துக்கு காரணம் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அனல் மின் நிலையம் துவங்கி 33 ஆண்டு்கள் நிறைவடைந்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அது பல விருதுகள் வாங்கிக் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment