கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது போலீசார் இன்று நடத்திய தாக்குதலைக் கண்டித்து தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் போராட்டம் பரவி இருக்கிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் யுரேனியம் நிரப்புவதை நிறுத்த வேண்டும் என்று கூடங்குளத்திம் மீனவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தின் உச்சகட்டமாக இன்று காலை கூடங்குளம் கடற்கரை பகுதியில் கூடியிருந்தோர் மீது தடியடி மற்றும் கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டன.
இந்த செய்தி கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கும் பரவியது. தூத்துக்குடி பனிமாதா ஆலயத்தின் ஒன்று திரண்ட மீனவர்கள் தூத்துக்குடி ரயில் நிலையத்தின் முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது ஒரு பிரிவினர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர் இதில் ரயில் என்ஜினின் கண்ணாடி உடைந்து சிதறியது.
No comments:
Post a Comment