கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை தர மறுத்து வருகிறது. இதுகுறித்து ஏற்கனவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. காவிரி நடுவர் மன்றத்தை உடனே கூட்ட வேண்டுமென்றும் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்ததை அடுத்து வருகிற 19-ந்தேதி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் காவிரி நடுவர் மன்றம் டெல்லியில் கூடுகிறது. இதில் முதல் அமைச்சர் ஜெயலலிதா, கர்நாடக முதல் மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டி மற்றும் பாண்டிச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
தற்போது கர்நாடக மாநிலத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. கபினி அணையும் நிரம்பியுள்ளது. என்றாலும் கர்நாடக அரசு மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடவில்லை. இந்நிலையில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ஒரு மனுதாக்கல் செய்தது.
அதில், சம்பா சாகுபடிக்கு உடனடியாக தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே கர்நாடக அரசு காவிரியில் தினமும் 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கோர்ட்டு உத்தரவிடவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜெயின், மதன் பி. லோகூர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வக்கீல்கள் கடுமையாக விவாதம் செய்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், காவிரியில் பிவிலிகுண்டு வரை தமிழ்நாட்டுக்கு கார்நாடக அரசு திறந்து விட்ட தண்ணீர் எவ்வளவு என்பதற்கான விளக்கத்தை திங்கட்கிழமைக்குள் சுப்ரீம் கோர்ட்டுக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment