கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே போராட்டக்காரர்கள் இன்று 2-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்த நிலையில், முற்றுகையை கைவிடுமாறு எஸ்.பி. விஜயேந்திர பிதரி கேட்டுக்கொண்டார். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முற்றுகையை கைவிட மறுப்பு தெரிவித்தனர்.
அந்த நேரத்தில் போராட்டக்குழுவை சேர்ந்த 7 பேர் 2 படகுகளில் கடல் வழியாக சென்று கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பின் பகுதியில், அணுமின் நிலைய சுற்றுச்சுவருக்கு அருகில் இறங்கி நின்றனர். இதனை பார்த்த போலீசார் அவர்களை பிடிக்க சென்றனர். அப்போது அவர்கள் தாங்கள் வந்த படகில் ஏறி திரும்பி சென்று விட்டனர்.
இந்நிலையில் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றிருந்த இடிந்தகரையை சேர்ந்த டென்சிலின் (வயது45) உள்பட 2 பேர், போலீசாரின் தடுப்பை மீறி அணுமின் நிலையத்தை நோக்கி சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பிடித்து சென்றனர்.
இதனை பார்த்த கடற்கரையில் அமர்ந்திருந்த போராட்டக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் டென்சிலின் உள்பட 2 பேரை பிடித்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக்ரோஷமாக கோஷம் எழுப்பி போலீஸ் தடுப்பை மீறி முன்னால் வர முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். மேலும் அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டும் வீசப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பிடித்து சென்றவர்களை விடுவிக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்ததால், 2 பேரையும் போலீசார் விடுவித்தனர். தடியடி சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதட்டம் அதிகரித்துள்ளது. ஆகவே போராட்டம் நடக்கும் இடத்திற்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

No comments:
Post a Comment