ரஜினி முன்னிலையில் அனுஷ்காவுக்கு ஷாக் கொடுத்தார் சந்தானம்.ஹீரோக்களுக்கு ஜோடி சேர ஆர்வம்
காட்டும் ஹீரோயின்கள் காமெடியன்களுக்கு ஜோடியாக நடிக்க கேட்கும்போது
ஓட்டம் பிடிக்கின்றனர். இம்சை அரசன் 23ம்
புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், தெனாலிராமன்
ஆகிய படங்களில் வடிவேலு சோலோ ஹீரோவாக
நடித்தார். அவருக்கு ஜோடியாக நடிக்க முன்னணி
நடிகைகளிடம் கால்ஷீட் கேட்டபோது கைவிரித்துவிட்டனர். கருணாஸ் ஹீரோவாக நடித்த
அம்பாசமுத்திரம் அம்பானி, சந்தமாமா, ரகளபுரம் ஆகிய படங்களிலும் அவருக்கு
ஜோடியாக நடிக்க பல ஹீரோயின்களிடம்
கால்ஷீட் கேட்டபோது வெவ்வேறு காரணம் சொல்லி மறுத்துவிட்டனர்.
இவர்களைத்
தொடர்ந்து ஹீரோவாக களத்தில் குதித்தார்
சந்தானம். கண்ணா லட்டு தின்ன
ஆசையா படத்தில் 3 ஹீரோக்களில் ஒருவராக நடித்தார். இதில்
விசாகா சிங் ஹீரோயினாக நடித்திருந்தாலும்
கதைப்படி அவர் மற்றொரு ஹீரோவுக்குதான்
ஜோடியாக நடித்தார். இதையடுத்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானம்
ஹீரோவாக நடித்தபோது அனுஷ்கா உள்பட மார்க்கெட்டில்
உள்ள பல ஹீரோயின்களை அணுகினர்.
யாரும் ஓ.கே. சொல்லவில்லை.
பிறகு புதுமுகம் ஆஷ்னா ஹீரோயினாக நடித்தார்.
சந்தானம்
ஹீரோ ஆனதை பாராட்டி நடந்த
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுஷ்கா, நல்ல ஸ்கிரிப்டா வந்தா
சொல்லுங்க சேர்ந்து நடிப்போம் என்றாராம். அப்போது சந்தானம், அடுத்து
ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிக்கப்போறேன். நீங்க ஜோடியா நடிக்கிறீங்களா
என்றாராம். அதற்கு அனுஷ்கா, நான்
ஜோடியாக நடித்தால்தான் கால்ஷீட் தருவேன் என்று கறாராக
சொல்லிவிடுங்கள் சேர்ந்து நடிச்சிடுவோம்‘ என்று விளையாட்டாக பதில்
சொன்னார்.சமீபத்தில் ‘லிங்கா‘ பட ஷூட்டிங்கில்
ரஜினியை சந்திக்க வந்திருந்தார் இயக்குனர் ராஜேஷ். அப்போது அனுஷ்கா,
சந்தானம் அருகில் இருந்தனர். அடுத்தபடம்
பற்றி ராஜேஷிடம் ரஜினி விசாரித்தார். அருகில்
இருந்த சந்தானம், ‘அந்த படத்தில் எனக்கு
ஜோடியா இவங்கதான் நடிக்கிறாங்க‘ என்று அனுஷ்காவை சுட்டிக்காட்னார்.
அதை கேட்டு ஷாக் ஆன
அனுஷ்கா சிரித்தும், மழுப்பி பேசியும் நிலைமையை
சமாளித்தாராம்.
No comments:
Post a Comment