சென்னை நகரில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பைக் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் சமீப காலமாக செயின் பறிப்பு, செல்போன் பறிப்புக்கு அடுத்து விலை உயர்ந்த பைக் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, ^40 ஆயிரம் முதல் 1 லட்சம் மதிப்புள்ள பைக்குகளை குறிவைத்து திருடுவது ஆங்காங்கே நடந்து வருகிறது. இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களே அதிகம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதை தடுக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசாரின் தீவிர கண்காணிப்பில், கடந்த சில வாரங்களுக்கு முன், அண்ணா சாலை பகுதியில் கல்லூரி மாணவர்களுக்காக பைக் திருடிய கும்பல் ஒன்று சிக்கியது. சில தினங்களுக்கு முன், சிறுவன் ஒருவன் திருட்டு பைக்கை, புதுப் பேட்டையில் விற்க வந்தபோது சிக்கினான். அவனிடம் நடத்திய விசாரணையில், மேலும் 3 சிறுவர்கள் இவனுடன் சேர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் போலீசார் பிடித்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வைத்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை நகரில் தற்போது பைக் திருட்டில் ஈடுபடுவது சிறுவர்களே அதிகம் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பைக் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது அதிர்ச்சி அளிக்கிறது.தற்போது, பைக் திருட்டு வழக்கில் பிடிபட்ட 4 பேரில் 2 பேர் பெற்றோர் களை இழந்தவர்கள். அன்றாட தேவை மற்றும் ஆடம்பர வாழ்க்கை வாழ பைக் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் திருடிய பைக்குகளை ^5 ஆயிரம் முதல் ^10 ஆயிரம் வரை விற்றுள்ளனர். இதுபோன்ற சிறுவர்களை கண்டறிந்து அவர்களுக்கு படிப்புடன் கூடிய கல்வியை அளிக்க கூடிய பாதுகாப்பு இல்லங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை கண்டறிந்து உடனடியாக தடுத்தால் தான் அடுத்த தலைமுறை தவறான பாதையில் செல்வதில் இருந்து பாதுகாக்க முடியும்,’ என்றார்.

No comments:
Post a Comment