Monday, December 29, 2014

எவனாயிருந்தாலும் வெட்டுவேன்: அஜித், விக்ரமை சீண்டிய விஷால்

விஷால், ஹன்சிகா முதன் முதலாக ஜோடி சேர்ந்துள்ள படம் ஆம்பள. இந்த படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்ட ஆர்யா பேசும் போது, “விஷாலிடம் என்ன மச்சான்  படம் எப்போ வெளியாகிறது என்றேன். பொங்கலுக்கு என்றார். பொங்கலுக்கு என்றால் பெரிய படங்கள் வருமேப்பா என்றேன். எவனாயிருந்தாலும் வெட்டுவேன் என்றார். விஷாலின் அந்த நம்பிக்கை எனக்குப் பிடித்தது.” என்று ஜாலியாய் பேசிய ஆர்யா, ஹன்சிகாவையும் விட்டு வைக்கவில்லை.

என்ன படத்தில நடிச்சுக்கிட்டிருக்கேன்னு ஒரு நாள் ஹன்சிகாகிட்டக் கேட்டேன். அம்பாலா படத்தில் நடிச்சுக்கிட்டிருக்கிறதா சொன்னாங்க. அம்பாலாவா? நமக்குத் தெரிஞ்சு அப்படி ஒரு படம் தயாராகவே இல்லையேங்கிற டவுட்டுல யாரு ஹீரோன்னு கேட்டேன். விஷால்னு சொன்னாங்க. அப்புறம்தான் புரிஞ்சுது.. ஆம்பளையைத்தான் இப்படி அம்பாலான்னு சொல்லி இருக்காங்கன்னு.. என்று ஹன்சிகாவையும் கலாய்த்தார்.


No comments:

Post a Comment