Tuesday, December 30, 2014

அடுத்தடுத்து தனுஷின் இரண்டு படங்கள்!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் , அமைரா தஸ்தூர் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘அனேகன்’. ஹாரிஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் இணையம் , ஐடியூன், டிவி என ஹிட்டடித்துள்ளது. 

இந்நிலையில் படத்தின் டிரெய்லர் ஜனவரி முதல் வாரத்தில் வெளியாகும் என கே.வி.ஆனந்த் மற்றும் தனுஷ் இருவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதேபோல் பால்கி இயக்கத்தில் அமிதாப், தனுஷ் , அக்‌ஷரா ஹாசன், நடிப்பில் உருவாகி வரும் ‘ ஷமிதாப்’ படத்தின் டிரெய்லரும் ஜனவரி 5ம் தேதி என உறுதி செய்துள்ளனர்.

அதேபோல் ‘அனேகன்’ படம் ஜனவரி இறுதியிலும் , ‘ஷமிதாப்’ பிப்ரவரி 5ம் தேதியும் வெளியாகும் என தெரிகிறது. வருட துவக்கமே தனுஷ் நடிப்பில் இரு படங்கள் வெளியாக உள்ளன. 

’அனேகன்’ படத்தை அடுத்த அடுத்த லெவல் கொண்ட காதல் என ஒரு வீடியோ கேம் போல் அமைத்துள்ளாராம் கே.வி.ஆனந்த். அதே போல் ’ஷமிதாப்’ இரு சினிமா கலைஞர்களுக்குள் உள்ள நட்பு மற்றும் ஈகோ பிரச்னையை சொல்ல போகிறது. 

No comments:

Post a Comment