இருப்பது ஏழு ஸ்வரம். அதற்குள்தான் பாடல்களெல்லாம் என்றாலும் எம். எஸ். வி யும் இளையராஜாவும் ரஹ்மானும் ஒவ்வொரு பாடலிலும் காட்டிய வெரைட்டி இப்போதைய இசையமைப்பாளர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. அதிகபட்ச ஆயுள் மூன்று மாதங்கள் என்று அவர்களே தீர்மானித்து போடும் மெட்டுகள் மூன்று நாளில் பழசாகின்றன. சமீபத்தில் ரிலீசான அநேகன் ஆடியோவும் சரி கயலும் சரி அந்தந்த படங்களின் இசையமைப்பாளர்களின் ரிப்பீட் வெர்ஷனையே காட்டுகின்றன.
அனேகன்: ஆத்தாடி ஆத்தாடி பாடல் மரியானின் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால்தான் என்ன பீட். மாற்றுவது விஜய்ப்ரகாஷின் குரல். டங்கா மாரி விசிலடிக்க வைக்கும் ஹிட் என்றாலும் கம்போசிங்கில் தொட்டி ஜெயா தொடங்கி தனது படங்களின் அத்தனை குத்துப் பாட்டுகளையும் காது முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். கிளி மாஞ்சாரோவுக்கு நெருங்கிய உறவாய் ரோஜா கடலே பாடல். என்னமோ ஏதோவை டச் பண்ணும் தெய்வங்கள் இங்கே. தாம் தூமில் ஒரு பாடலை ஞாபகப் படுத்தும் தொடுவானம் என்று மின்னலே ஹாரிஸ் மின்னல் நேரத்தில் மறைகிறார்.
கயல்: டி. இமான் தனக்கென்று ஒரு பிராண்ட் தீர்மானித்தாரென்றால் இயக்குநர் பிரபு சாலமனுக்கென்று தனி பிராண்ட் வைத்திருக்கிறார். மைனா, கும்கி, இரண்டையும் மிக்சியில் போட்டு அடித்து கயலில் கைவரிசையைக் காட்டியிருக்கிறார். எங்கிருந்து வந்தாயோ இனிமை யென்றாலும் ஏனோ அவரின் முந்தைய ஹிட்டுகளான புதிய உலகையும் நெஞ்சே நெஞ்சே வையும் ஞாபகம் வருவது தவிர்க்க முடியவில்லை. பறவையா பறக்கிறோம் ஹரிசரண் இருந்தும் நோ யூஸ். எங்க புள்ள இருக்க பல்ராமின் வேறு பாடலையே நினைவில் கொண்டு வருகிறது. டீயாலோ லாம் இமானின் இசையிலேயே மனங்கொத்திப் பறவை, கும்கி என்ற்று கேட்டதுதான். கேட்டவுடனே மனதை வருடும் எங்கிருந்து வந்தாயோ சரணத்தில் வழக்கமான ரூட்டில் பயணித்திருப்பது சாமானிய இசை ரசிகனுக்கே அலுப்பு தட்டுகிறது.
புதுசா யோசிங்க நம்பிக்கை இசையமைப்பாளர்களே...

No comments:
Post a Comment