‘ஐ’ படத்தில் மூன்று கேரக்டரில் நடித்துள்ளதாக விக்ரம் தெரிவித்தார். இந்த படம் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. விக்ரம் ஜோடியாக எமிஜாக்சன் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஷங்கர் இயக்கியுள்ளார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து உள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழாவை ஹாலிவுட் நடிகர் அர்னால்டை அழைத்து வந்து பிரமாண்டமாக நடத்தினர்.
பொங்கலுக்கு படம் ரிலீசாகிறது. தமிழ் தவிர தெலுங்கு இந்தி மொழிகளிலும் ‘ஐ’ படம் வருகிறது. இதற்காக மும்பை, ஐதராபாத் நகரங்களுக்கு நேரில் சென்று அந்தந்த மொழி பாடல் சி.டிக்களை வெளியீட்டு உள்ளனர். ஐதராபாத்தில் நடந்த விழாவில் விக்ரம் பேசும் போது, தெலுங்கு ரசிகர்கள் என் படங்களுக்கு வரவேற்பு அளிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘ஐ’ படம் தெலுங்கு ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றார்.
மும்பையில் நடந்த விழாவில் பேசியதாவது:–
சினிமா வாழ்க்கையில் ‘ஐ’ எனக்கு முக்கிய படம். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியது பெருமை. இதில் மூன்று வித்தியாசமான கேரடக்டரில் வருகிறேன். ஒவ்வொரு கேரக்டரும் வெவ்வேறு விதமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. தோற்றம், பேச்சு எல்லாமே வித்தியாசமாக இருக்கும். சினிமாவில் வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று எப்போதுமே எனக்கு ஆர்வம் உண்டு.
நாடகங்களில் நடித்துக் கொண்டே தான் வளர்ந்தேன். வகுப்பில் இருந்ததை விட மேடை நாடகங்களில் பங்கேற்றது தான் அதிகம். நாடகத்தில் நடித்த போது ஆசிரியர்கள் எனக்கு ஜுலியஸ் சீசர்வேடம் அளித்தனர். எனக்கு அது பிடிக்கவில்லை. புரூட்டஸ் வேடத்தில் நடிக்கிறேன் என்றேன். அந்த கேரக்டர்தான் வித்தியாசமாக இருந்தது. அது போல் தான் சினிமாவிலும் எதிர்ப்பார்க்கிறேன். எப்போதும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு உண்டு.
இந்தியில் ஷோலோ படத்தின் வரும் கப்பார் சிங் கேரக்டர் மிகவும் பிடிக்கும். அந்த கேரக்டரில் நடிக்க ஆசை.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment