பெங்களூர் எம்.ஜி.ரோடு சர்ச் தெருவில் நேற்று இரவு 8.30 மணியளவில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் பிளாட் பாரத்தில் நடந்து சென்ற பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பெண் பலியானார். மற்ற 2 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். போலீஸ் விசாரணையில் பலியான பெண் பெயர் பவானி (37) சென்னையை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. அண்ணாசாலை எல்.ஐ.சி. பின்புறம் உள்ள ஜெனரல் பாட்டர்ஸ் சாலை பூபேகம் 2–வது தெருவில் வசித்து வந்தார்.
பவானியின் கணவர் பாலன் சென்னையில் டயர் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். உறவினர் ஒருவரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பவானி தனது குழந்தைகள் உள்பட 8 பேருடன் பெங்களூர் சென்று இருந்தார். நேற்று ரெயிலில் சென்னை திரும்ப முன்பதிவு செய்திருந்தார். ஆனால் டிக்கெட் ‘கன்பார்ம்’ ஆகவில்லை.
இதனால் பவானியும், குழந்தைகளும் பெங்களூரிலேயே தங்கி விட்டனர். நேற்று இரவு பவானி, உறவினர் கார்த்திக் (22) உடன் பெங்களூரில் ஷாப்பிங் சென்று விட்டு எம்.ஜி.ரோடு சர்ச் சாலையில் நடந்து சென்றபோது அங்கு வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்தது. இதில் பவானியும், கார்த்திக்கும் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
இதில் பவானிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதிக அளவில் ரத்தம் வெளியேறிக் கொண்டு இருந்தது. அவரை ‘தற்கொலைப் பெண்’ என்ற சந்தேகத்தில் அந்த பகுதியில் இருந்தவர்கள் சந்தேகித்து காப்பாற்ற முன்வரவில்லை.
ஆனால் உடன் சென்ற கார்த்திக் கொடுத்த தகவலின் பேரில் ஆட்டோ டிரைவர் நரசிம்கா என்பவர் முன்வந்து பவானியை மீட்டு மல்லையா ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
படுகாயம் அடைந்த கார்த்திக் பெங்களூர் லால்பார்க் அருகே மாவலியில் தங்கி அங்குள்ள தயானந்த சாகர் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வந்தார்.
விடுமுறைக்காக பவானியின் சென்னை வீட்டுக்கு வந்து விட்டு மீண்டும் பவானியுடன் பெங்களுர் சென்றார்.
இந்த சம்பவத்தின்போது பவானியின் குழந்தைகள் லட்சுமிதேவி, பாரத் ஆகியோர் அருகில் உள்ள ஸ்டேடியத்தில் விளையாடிக் கொண்டு இருந்ததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
குண்டு வெடிப்பில் ‘ஐகேட்’ நிறுவன ஊழியர் சந்தீப், ‘ஐ.பி.எம்.’ ஊழியர் வினய் ஆகியோரும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இருவரும் ஐதராபாத்தில் இருந்து வந்த நண்பர்களை சந்திக்க சென்றபோது குண்டு வெடிப்பில் சிக்கினர். இருவரும் ஹோஸ்மத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பவானி இறந்த தகவல் கிடைத்ததும் சென்னையில் இருந்து கணவர் மற்றும் உறவினர்கள் உடனடியாக பெங்களூர் புறப்பட்டு சென்றனர்.
பவானியின் உடல் பெங்களூர் விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சென்னை கொண்டு வரப்படுகிறது.
காயம் அடைந்த கார்த்திக்குக்கு முதுகு மற்றும் உடலில் வெடிகுண்டு சிதறல்கள் பாய்ந்து இருந்ததால் இன்று அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது. நரம்பு மண்டலத்தில் பாதிப்பு உள்ளதா என்றும் பரிசோதனை நடக்கிறது.
கர்நாடக உள்துறை மந்திரி ஜார்ஜ், போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று கார்த்திக்கை பார்த்து உடல் நலம் விசாரித்தனர்.

No comments:
Post a Comment