சீக்கியர்களை எதிர்த்து கருத்து தெரிவித்ததன் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர், குர்மீட் ராம் ரஹிம் சிங். டேரா ஸச்சா சவுதா என்ற அமைப்பை ஏற்படுத்தி சில சமூக சேவைகளை செய்துவரும் இவருக்கு அரியானா மாநிலத்தில் உள்ள சிர்ஸா நகரில் பெரிய ஆசிரமம் உள்ளது.
இந்த ஆசிரமத்தில் பல ஆண்,பெண் சீடர்கள் தங்கியுள்ளனர். இங்கு தங்கியிருக்கும் ஆண் சீடர்களுக்கு இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக சுமார் 400 பேரின் விதைகளை அகற்றி விட்டதாக ஒரு முன்னாள் சீடர் பரபரப்பு புகாரை வெளியிட்டார்.
ஹன்ஸ்ராஜ் சவுகான் என்ற அந்த சீடர் இதே குற்றச்சாட்டை குறிப்பிட்டு பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார்.
இது தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணைக்கு நீதிபதி கண்ணன் உத்தரவிட்டார். இதனையடுத்து, சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் ஆண்மையை உற்பத்தி செய்யும் விதைகளை அகற்றி விட்டால் கடவுளை காணலாம் என்று உபதேசித்த குர்மீட் ராம் ரஹிம் சிங், தனது ஆசிரமத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்களை வைத்து பல சீடர்களின் ஆண்மையை பறித்துள்ளது உறுதி செய்யப்பட்டது.
சுமார் 400 சீடர்களின் ஆண்மையை பறித்த சாமியார் குர்மீட் ராம் ரஹிம் சிங் மீது நாளை வழக்குப்பதிவு செய்யப்படும் என சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். இவர் மீது ஏற்கனவே, ஒரு பத்திரிகையாளரை கொன்றது, ஆசிரமத்தில் உள்ள பெண் சீடர்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துக் கொண்டது உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு இன்று பதிலளித்த குர்மீட் ராம் ரஹிம் சிங், ‘இந்த குற்றச்சாட்டுகள் முழுக்க,முழுக்க பொய்யானவை. இதுபோன்ற ஆபரேஷனுக்கு உடன்படும்படி நான் யாரையும், எப்போதும் கேட்டுக் கொண்டதில்லை.
அப்படி நான் சொன்னதாக யாராவது நிரூபித்தால் என் தலையை துண்டித்துக் கொள்ள தயாராக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், இவர் கதாநாயகனாக நடிக்கும் ‘மெஸெஞ்சர் ஆப் காட்’ (கடவுளின் தூதர்) என்ற திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகியுள்ளது. நாடு முழுவதும் இந்தப் படம் வரும் ஜனவரி 16-ம் தேதி வெளியாகவுள்ளது, குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment