டோணி திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்திருப்பதன் பின்னணியில் உள்ள மர்மத்தை அவரே விலக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டித் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, திடீரென ஒரு டெஸ்ட் பாக்கியிருக்கும்போதே டோணி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணிக்குள் புகைச்சல் அதிகமாக இருப்பதை அவரது முடிவு காண்பிக்கிறது. இதனிடையே டோணியின் ரசிகர்கள் சில கேள்விகளை அவரிடம் முன்வைக்கின்றனர்.
அதற்கு டோணியே பதில் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். இந்தியா அடுத்ததாக ஆறு மாதங்கள் கழித்துதான் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளது.
அப்படியிருக்கும்போது இன்னும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டு ஓய்வை அறிவித்திருக்கலாமே? எதற்காக பாதியில் வெளியே வந்தார்? ஒரு வீரர் ஓய்வு பெறுவதை அந்த வீரரே பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு நடத்தி சொல்வதுதான் வாடிக்கை.
அப்படியிருக்கும்போது, ஏன் பிசிசிஐ அந்த அறிவிப்பை வெளியிட்டது? ரவி சாஸ்திரி கோஹ்லிக்கு நெருக்கமாக இருப்பதுதான் டோணியின் இந்த முடிவுக்கு காரணமா? என்பது போன்ற விடை தெரியாத கேள்விகள் தொக்கி நிற்கின்றன. விடை சொல்வாரா டோணி?

No comments:
Post a Comment