பூஜை செய்வதற்கு கன்னிப் பெண் வேண்டும், என்றும் அந்த பெண் நிர்வாணமாக நிற்கவேண்டும் என்று கூறிய போலி சாமியார்களை பொதுமக்கள் கட்டிவைத்து அடித்து காவல்துறையினரரிடம் ஒப்படைத்துள்ளனர்.
செங்கல்பட்டு அருகே மாந்திரீகம் மூலம் குடும்ப பிரச்னையை தீர்த்துவைப்பதாக கூறி, சில்மிஷத்தில் ஈடுபட்ட போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு அடுத்த புதுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் 30 வயதுடைய ராதாகிருஷ்ணன். பொன் விளைந்த களத்தூரைச் சேர்ந்தவர் பொன்ராஜ். பட்டதாரிகளான இவர்கள் இருவரும் கணினி வடிவமைப்புக் கலைஞர்கள்.
சில தினங்களுக்கு முன்னர் இவர்கள் இருவரும், இணையதளத்தில் பார்த்த விளம்பரத்தில், ‘ குடும்ப கஷ்டமா? உடனே எங்களது செல்போன் நம்பரில் தொடர்பு கொள்ளலாம். மாந்திரீகம் மூலம் உங்களது பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைப் பேசி எண்ணுக்கு, ராதாகிருஷ்ணன் தொடர்பு கொண்டுள்ளார். எதிர்முனையில் பேசியவர், ரூ.20 ஆயிரம் தந்தால் மாந்திரீக முறைபடி பூஜை செய்து பிரச்னைகளைத் தீர்ப்பதாக கூறியுள்ளார்.
இதை நம்பிய ராதாகிருஷ்ணன் அவர்களை தனது வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார். இதையடுத்து சூளைமேடு பகுதியைச் சேர்ந்த39 வயதுடைய காதர்பாஷா, 30 வயதுடைய அபுசாத்கர் ஆகியோர் புதுப்பாக்கத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வந்துள்ளர்.
அவர்கள் ராதாகிருஷ்ணனிடம் ரூ.20,000 பெற்றுக்கொண்டனர். பூஜை செய்வதற்கு கன்னிப் பெண் வேண்டும், அந்த பெண் நிர்வாணமாக நிற்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதற்காக 15 வயது சிறுமியையாவது அழைத்து வரும்படி அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார். அப்படியானால் நீங்கள் பூஜையின்போது நிர்வாணமாக நின்றால்தான் பூஜை முழுமை பெறும் என்று கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, ராதாகிருஷ்ணன் இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு நின்றுள்ளார். பூஜை நடந்து கொண்டிருந்த போது அந்த ஆசாமிகள் திடீரென ராதாகிருஷ்ணன் கட்டியிருந்த துண்டை அவிழ்த்துள்ளனர். இதனால் ராதாகிருஷ்ணன் கூச்சலிட்டுள்ளார்.
இதனால், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். பொதுமக்களைப் பார்த்ததும் இருவரும் தப்பிஓட முயன்றுள்ளனர். அவர்களை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் அவர்களைக் கட்டிவைத்து சரமாரியாக அடித்துள்ளனர்.
பின்னர், இது குறித்து செங்கல்பட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து காதர்பாஷா, அபுசாத் ஆகியோரை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

No comments:
Post a Comment