சென்னையில் நடைபெற்ற 12-வது சர்வதேச திரைப்பட விழாவில் குற்றம் கடிதம் திரைப்படம் முதல் பரிசினை பெற்றுள்ளது. சென்னையில் கடந்த 18ஆம் தொடங்கிய 2-வது சர்வதேச திரைப்பட விழா 8 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது.
இந்த விழாவில் 12 தமிழ் படங்கள் உள்பட 170 படங்கள் திரையிடப்பட்டன. என்னதான் பேசுவதோ, மெட்ராஸ், பூவரசம் பீப்பீ, சதுரங்க வேட்டை, வெண்நிலா வீடு, சலீம், முண்டாசுப்பட்டி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், சிகரம் தொடு, பண்ணையாரும் பத்மினியும், தெகிடி, குற்றம் கடிதல் ஆகிய தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
குற்றம் கடிதல்
தமிழ்த் திரைப்படங்களுக்கான பரிசுகளில், அறிமுக இயக்குநர் பிரம்மா ஜி இயக்கிய 'குற்றம் கடிதல்' படம் முதல் பரிசைப் பெற்றது. சமூகத்தில் இருக்கும் வெவ்வேறு விதமான மனிதர்கள் ஒரு சம்பவத்தால் பரபரப்பாகிறார்கள். அந்தச் சம்பவம் என்ன? என்பதுதான் படத்தின் கதை.
ஏற்கெனவே இந்தியன் பனோரமா, ஜிம்பாப்வே திரைப்படவிழா, மும்பை திரைப்படவிழா என பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட இந்தப் படம் இன்னும் திரைக்கு வரவில்லை.
சதுரங்க வேட்டை
'சதுரங்கவேட்டை' திரைப்படம் இரண்டாம் பரிசைப் பெற்றது. சமூகத்தில் மனிதர்களின் பேராசைகளை மையப்படுத்தி நடக்கும் மோசடிகளை வெட்டவெளிச்சமாக்கிய இந்தப் படம், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
கதை திரைக்கதை வசனம் இயக்கம்
'சிறப்பு நடுவர் விருது' ரா.பார்த்திபன் இயக்கிய 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்துக்கும், 'சிறப்பு விருது'க்கு புதுமுகப் பெண் இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கிய 'பூவரசம் பீப்பி' படமும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கார்த்திக் சுப்புராஜ்
இதுதவிர, இந்த விழாவில் 'அமிதாப்பச்சன் யூத் ஐகான்' விருதை ஜிகர்தண்டா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பெற்றார்.
எம்.ஜி.ஆர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இயக்கிய 'ச்சீ' குறும்படத்திற்கு 'அம்மா விருது'ம் வழங்கப்பட்டது.
அறிமுக இயக்குநர்கள்
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடலுக்குத் தேர்வான தமிழ் படங்களின் பெரும்பாலான இயக்குநர்கள் மட்டுமல்ல, அங்கீகாரம் பெற்ற 4 தமிழ் இயக்குநர்களில் மூவர் அறிமுகங்கள் என்பது சிறம்பம்சமாகும்.

No comments:
Post a Comment