6½ கோடி ஆண்டு முட்டை
இத்தாலி நாட்டின் டிரகோனா நகரில் வசிக்கும் 74 வயது டொமினிகோ அகோஸ்டினெலி ஒரு வினோதமான மனிதர். இவர், கடந்த 60 ஆண்டுகளாக கடந்த கால மற்றும் நிகழ்கால அரிய வகை கலைப்பொருட்களைச் சேகரித்து வருவதை வழக்கமாக கொண்டு உள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்த கலைப்பொருட்களை கொண்டு ஒரு அருங்காட்சியகத்தையும் நடத்தி வருகிறார்.
இவரிடம் உள்ள மிகவும் பழமையான கலைப்பொருட்களில் 6½ கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் முட்டையும் ஒன்று. அதை ஒரு புகைப்படம் போல் ஒரு அழகிய கண்ணாடி சட்டத்துக்குள் வைத்து பொதுமக்களின் பார்வைக்கும் வைத்து இருக்கிறார்.
எடை தாங்காமல் இறந்த கழுதை குட்டி
ஸ்பெயின் நாட்டின் லூசினா நகரில் அண்மையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை 150 கிலோ எடை கொண்ட ஒரு மனிதர் நூதன முறையில் கொண்டாடினார். இதற்காக பல்வேறு விலங்குகளை அவர் ஒரே இடத்திற்கு கொண்டு வந்திருந்தார். அப்போது பிளாட்ரோ என்ற 5 மாத கழுதை குட்டியின் முதுகில் சவாரி செய்து அவர் போட்டோவுக்கு ‘போஸ்’ கொடுத்தார்.
அவரது துரதிர்ஷ்டம் 2 நாட்களுக்கு பின்பு அந்த கழுதை குட்டியால் நிற்க முடியவில்லை. இதனால் அந்த கழுதை குட்டியை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலன் இல்லாமல் மறுநாளே கழுதை இறந்து போனது.
இதனிடையே 150 கிலோ ஆசாமி கழுதை குட்டி மீது உட்கார்ந்து இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் இடம் பெற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பிராணிகள் நல ஆர்வலர்கள் ‘150 கிலோ மனிதர் உட்கார்ந்ததுதான் கழுதையின் மரணத்துக்கு காரணம். அவருடைய எடையை தாங்க முடியாமல்தான் கழுதை செத்துவிட்டது’ என்று போலீசில் புகார் செய்தனர். போலீசாரும் 38 வயதுடைய அந்த மனிதரை கைது செய்து அவர் மீது விலங்குகளை தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி வழக்கும் தொடர்ந்து உள்ளனர்.

No comments:
Post a Comment