தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் நடபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் தொ.மு.ச., மற்றும் சி.ஐ.டி.யு. உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றன. ஊதிய உயர்வு, பணிநிரந்தரம், வேலை நேரத்தை குறைப்பது உள்பட 22 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வந்தனர்.
அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முதலில் சுமூகமான தீர்வுகள் ஏதும் எட்டவில்லை. இந்த சூழ்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் பேச்சுவார்த்தை இன்று நடத்தப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையில் தொழிலாளர் சங்கம் சார்பில் சண்முகம், நடராஜன், அண்ணா தொழிற்சங்கம் சார்பில் சின்னசாமி, சி.ஐ.டி.யு.. சங்கம் சார்பில் சவுந்தரராஜன் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். மொத்தம் 12 தொழிற்சங்கம் சார்பில் அதன் பிரதிநிதிகள் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர்.
கோரிக்கை ஏற்பு
ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக குழு அமைக்க அரசு தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. கைதான தொழிலாளர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்பட்டது. பேச்சுவார்த்தை குழுவை ஓரிரு நாளில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல் அளித்துள்ளனர்.

No comments:
Post a Comment