Sunday, December 28, 2014

தனுஷுக்கு ஜோடியான சமந்தா!

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் , அமலா பால் இணைந்து நடித்த ’வேலையில்லா பட்டதாரி’ விமர்சன ரீதியிலும் சரி , வியாபார ரீதியிலும் சரி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலையில் மீண்டும் இந்தக் குழு அடுத்த படம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக ஏற்கனவே தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் தெரிவித்திருந்தார். 

இப்போது நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் ,அனிருத் மற்றும் சமந்தாவுடன் இணைந்திருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு , ‘' 'விஐபி’ டீம் சமந்தாவை வரவேற்கிறது. பிப்ரவரி 2015லிருந்து படப்பிடிப்பு ஆரம்பம் '' என தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே இதே ‘விஐபி’ டீம் இணையும் புதிய படத்தில் எமி ஜாக்சன் நடிப்பதாக தனுஷ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தில் இரண்டு நாயகிகளா அல்லது எமிக்கு பதில் சமந்தாவா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

No comments:

Post a Comment