ஆந்திராவில் பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பேய் விரட்டும் சாமியார் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கமலாபுரத்தில், இளைஞர் ஒருவர் காவி உடை அணிந்து தன்னை சாமியார் என்று கூறி கொண்டு உலா வந்துள்ளார். அங்குள்ள அய்யப்பன் கோவிலின் பின்புறம் உள்ள அறையில் தங்கி இருந்த அவரை, கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசிக்க தொடங்கி உள்ளனர்.
தங்கள் குடும்ப பிரச்னை, மனக்குறைகளை பொதுமக்கள் அந்த சாமியாரிடம் கூறி நிவாரணம் கேட்டுள்ளனர். அவர்களிடம் உங்களுக்கு பேய் பிடித்துள்ளது. அதை கட்டிப்பிடி வைத்தியம் மூலம் நிவர்த்தி செய்கிறேன் என்று கூறி தன்னிடம் வந்த பெண்களை கட்டி அணைத்தும், முத்தம் கொடுத்தும் உள்ளார்.
இதனால் அவரை அந்தப் பகுதியில் 'முத்த பாபா' என்று அழைத்து வந்துள்ளனர். இதில் சாமியார் பிரபலமானதால், நாளுக்கு நாள் அவரை தேடி வரும் பெண்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. மேலும், சாமியாரின் சக்தியை பற்றி அவரது உதவியாளர் சுப்பா ரெட்டி, நோட்டீஸ் அச்சடித்து விநியோகித்துள்ளார். அதில், ''பில்லி, சூனியம், ஏவல், பேய், உடல் நலக்குறைவு போன்றவற்றை தீர்க்கும் அதிசய சாமியாரை சந்திக்க வாருங்கள்'' என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.
இதற்கிடையே போலி சாமியார் ஒருவர், பெண்களை கட்டிப்பிடித்தும், முத்தம் கொடுத்து மோசடி செய்வதாக போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, போலீசார் நேற்று முன்தினம் சாமியாரின் அறைக்குள் அறைக்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள். பின்னர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
சாமியாரிடம் விசாரணை நடத்திய நீதிபதி, அவரை வருகின்ற ஜனவரி மாதம் 7 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சாமியாரின் நடவடிக்கைகள் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதால், அவரை மனநல மையத்தில் சேர்க்க உத்தரவிட்டார். அதன்படி சாமியார் தற்போது மனநல மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment