கடந்த 1948 ல் மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற கோட்சேவுக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டது. சமீபத்தில் கோட்சே இந்த நாட்டின் தேசியவாதி என்று நாடாளுமன்றத்தில் பேசிய பாஜக எம்.பி,. மகராஜ் கருத்தால் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தனது பேச்சை திரும்ப பெற்று கொள்வதாக அறிவித்தார்.
25-1419506144-gandhi-godse-698.jpg
இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் சிட்டாபூரில் இந்து மகா சபா அமைப்பினர் கோட்சேவுக்கு கோயில் கட்டும் பணியில் இறங்கியுள்ளனர். இந்தக் கோயிலானது அடுத்தாண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி, அதாவது காந்தியின் நினைவு நாளன்று திறக்கப் படும் என கோயில் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இந்து மகா சபா மற்றும் ஓம் சிவ மகாகால் சேவா சமிதியும் இணைந்து மீரட்டில் நாட்டிலேயே கோட்சேவுக்கான முதல் சிலையை நிறுவும் பணிக்கான அடிக்கல் நாட்டியுள்ளது. இந்த சிலையும் வரும் ஜனவரி 30ம் தேதி அன்றே திறக்கப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இது தவிர, கோட்சே தொடர்பான திரைப்படம் ஒன்றும் ஜனவரி 30ல் ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு ஓன்று புனே கோர்ட்டில் நாளை ( வெள்ளிக்கிழமை ) விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment