பெங்களூரு நகரில் மீண்டும் குண்டுவெடிப்பு நடத்தப்படும் என்று டிவிட்டர் மூலம் 17 வயது சிறுவன் ஒருவன் மிரட்டியுள்ளான்.
இதையடுத்து அவனைக் கண்டுபிடித்து நேரில் வரவழைத்து எச்சரித்து விடுத்துள்ளனர் போலீஸார். பெங்களூரு சர்ச் தெருவில் நேற்று முன்தினம் குண்டுவெடித்து சென்னையைச் சேர்ந்த பவானி என்ற பெண் பலியானார்.
மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில், அப்துல் என்ற பெயரில் பெங்களூருவில் மீண்டும் குண்டுகள் வெடிக்கும் என்று டிவிட்டர் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக பரபரப்பு கிளம்பியது.
அந்த டிவிட்டில், பெங்களூரு சர்ச்தெருவில் குண்டு வைத்தது நான் தான். இன்னும் 2 நாட்களில் பெங்களூரு நகரில் மேலும் 2 குண்டுகள் வெடிக்கும். முடிந்தால் என்னை பிடித்து பாருங்கள் என்று சவால் விடுகிறேன் என்று கூறப்பட்டிருந்ததாம்.
இதையடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர். அதில், இந்த மிரட்டலை விடுத்தது 17 வயது கல்லூரி மாணவன் என்று தெரிய வந்ததாம். இதையடுத்து போலீஸார், அந்த மாணவனின் பின்புலத்தை விசாரித்துள்ளனர். அதன் பின்னர், தீவிரவாதிகளுடன் அவனுக்கு சம்பந்தம் இல்லை என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து அந்த மாணவனை எச்சரித்து விடுவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட மாணவன் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளான் என்று குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் அபிஷேக் கோயல் தெரிவித்துள்ளார். அந்த மாணவனின் டிவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
இனிமேல் யாரும் இப்படி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அபிஷேக் கோயல் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment