கமலஹாசன் ஹீரோவாக நடிக்கும், உத்தமவில்லன் திரைப்படத்தில் பாலச்சந்தர் சிறு வேடத்தில் நடித்துள்ளதாகவும், தன்னை நடிகனாக்கிய பாலச்சந்தர் கடைசியாக நடித்த படத்தை தான் இயக்குவதில் பெருமிதம் அடைந்துள்ளதாகவும் கூறுகிறார் ரமேஷ் அரவிந்த்.
இதுகுறித்து ரமேஷ் அரவிந்த் கூறியுள்ளதாவது: கமல்ஹாசன் நடித்துள்ள 'உத்தமவில்லன்' திரைப்படத்தை நான் இயக்குகிறேன்.
அதில் என்னை திரையுலகத்திற்கு அறிமுகம் செய்த பாலச்சந்தரை சிறு வேடத்தில் நடிக்க அழைத்தேன். அவரும் ஆறு நாட்கள் பெங்களூருவில் தங்கி படத்தில் நடித்துக் கொடுத்தார்.
அவருக்கு அளித்த வசனங்களை எடிட் செய்து கூர்தீட்டினார். என்னை திரையுலகத்திற்கு அறிமுகம் செய்த பாலச்சந்தர் நடித்த கடைசி திரைப்படத்தை இயக்கினேன் என்கிற பெருமை எனக்கு கிடைத்துள்ளது.
உத்தமவில்லன் திரைப்படத்தை பாலச்சந்தருக்கே அர்ப்பணிக்க உள்ளேன். சினிமாவில் ஏதேனும் ஒரு பிரிவில் திறமைசாலிகளாக இருக்கும் இயக்குநர்கள் உண்டு.
ஆனால் வசனம், கேமரா கோணம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலுமே திறமையானவர் என்றால் அது பாலச்சந்தர்தான். அனைத்து மொழி இயக்குநர்களுமே தெரிந்தோ, தெரியாமலோ அவரால் உந்தப்பட்டவர்கள்தான்.
பாலச்சந்தர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் வந்தாலே அங்கு பிற கலைஞர்களிடமும் சுறுசுறுப்பு தொற்றிக்கொள்ளும். அவரை பார்க்க வெள்ளை உடை உடுத்திய சிங்கம் போலவே இருக்கும்.
சுந்தர ஸ்வப்னகலு, மனதில் உறுதி வேண்டும், ருத்ரவீணா என முறையே, கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் அடுத்தடுத்து என்னை அறிமுகம் செய்தவர் கே.பி.சார்தான். இவ்வாறு ரமேஷ் அரவிந்த் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment