காந்தியை சுட்டுக் கொலை செய்த நாதுராம் கோட்சேவுக்கு தமிழகத்தில் சிலை வைக்க பாரதீய இந்து மகா சபை தீர்மானம் நிறைவேற்றியிருப்பதற்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேசத் தந்தை என்று போற்றப்படும் காந்திஜியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவிற்கு சிலை அமைப்பது தேச விரோதச் செயல் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து இந்துத்துவா செயல் திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே கோட்சேவிற்கு சிலை அமைப்பது தொடர்பான இந்த தீர்மானத்தை பார்க்க வேண்டியிருக்கிறது.
கோட்சேவிற்கு சிலை அமைப்பதன் மூலம் நாட்டு மக்களுக்கோ, வருங்கால சந்ததியினருக்கோ எந்த வரலாற்றை சொல்லப் போகிறது இந்து மகா சபை என்பதை அது தெளிவுபடுத்த வேண்டும்.
'இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டதால்தான் காந்தியைக் கொன்றேன்' என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்த ஒருவரது சிலையை அமைப்பது என்பது இந்திய மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் செயலாகும்.
கோட்சேவிற்கு சிலை அமைத்தால் வகுப்பு பதட்டம் ஏற்படும். வன்முறைகள் பெருகும். மத நல்லிணக்கம் கெடும். இதனால் சட்டம் ஒழுங்கு சீர் குலையும். சகோதரத்துவ உணர்வுகள் அற்றுப் போய் சமூக அமைதியும் கெடும்.
ஏற்கெனவே இருக்கும் சிலைகளால் ஏராளமான பிரச்சனைகளை தமிழகம் சந்தித்து வருகிறது. கொடியவன் கோட்சேவின் சிலையை அமைத்து விட்டு, பிறர் மீது பழியை போட்டு கலவரத்தை தூண்டுவார்கள்.
இது போன்ற அசம்பாவிதங்களுக்கு காரணமாகும் இந்து மகா சபையின் சிலை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. தும்பை விட்டு வாலை பிடிக்காமல், இது போன்ற நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த தமிழக அரசு முன் வர வேண்டும்.
வகுப்புவாத உள்நோக்கம் கொண்ட இந்து மகா சபையின் சிலை அமைக்கும் முயற்சிக்கு ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டும் என்று தனது அறிக்கையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொண்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment