இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக புதிய டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டோனி விடைபெற்றது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் கருத்து தெரிவிக்கையில், நான் விளையாடிய கேப்டன்களிலேயே டோனி தான் சிறந்த கேப்டன். இருவரும் இணைந்து உற்சாகமாக விளையாடி இருக்கிறோம். அற்புதமான டெஸ்ட் வாழ்க்கையை பெற்ற அவருக்கு பாராட்டுகள். எனது நண்பரின் அடுத்த இலக்கு 2015–ம் ஆண்டு உலக கோப்பை தான் என்று கூறினார்.
டோனியின் விலகல் முடிவு எதிர்பார்த்தது தான். ஒரு நாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்தியாவின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக டோனி விளங்குகிறார். என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
டோனி எனது ஹீரோ. தெண்டுல்கர், ஷேவாக் பற்றி நாம் நிறைய பேசுகிறோம். அவர்களை போன்று திறமை படைத்தவர்களில் டோனியும் ஒருவர் என்று கபில்தேவ் கூறியுள்ளார்.
மிகச்சிறந்த போட்டியாளர். இந்திய கிரிக்கெட் அவருக்கு நிறைய நன்றி கடன்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன் என்று ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கிபாண்டிங் தெரிவித்துள்ளார்.
முன்னுதாரணமான ஒரு அணித்தலைவர் டோனி. அணியை வழிநடத்துவதிலும், திறமையை வெளிப்படுத்துவதிலும் எப்போதும் சரியான கலவையில் இருப்பவர் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
அணியை வழிநடத்தும்போது தைரியமான அணித்தலைவராக இருந்தீர்கள். இப்போது தைரியமான முடிவு எடுத்து வெளியேறுகிறீர்கள் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டோனி விடைபெற்றது குறித்து இந்நாள் மற்றும் முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment