சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் வழக்கில் இருந்து பா.ஜனதா தலைவர் அமித் ஷாவை சி.பி.ஐ. கோர்ட்டு விடுவித்தது.
சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்டரில் அமித் ஷாவிற்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து அமித்ஷா கடந்த 2010-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதையடுத்து அப்போதைய குஜராத் மாநில மோடி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து விலகினார். மூன்று மாதங்களுக்கு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.
இவ்வழக்கு 2012-ம் ஆண்டு விசாரணைக்கு மராட்டிய மாநிலத்திற்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ. கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.
என்கவுன்டர் நடைபெற்றபோது உள்துறை மந்திரியாக இருந்த அமித்ஷா மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்பட 18 பேரது மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அமித்ஷா மீது கிரிமினல் சதி, சாட்சியங்களை அழித்தல் மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் குற்றம்புரிதல் என்ற பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கில் இருந்து அமித் ஷாவை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு விடுவித்துள்ளது. சி.பி.ஐ.யின் அனுமானங்கள் மொத்தத்தில் ஏற்ககூடியது அல்ல, அவர் ஒரு குற்றவாளியாக குற்றம்சாட்ட முடியாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment