மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராகிம் துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் ரியல் எஸ்டேட் ராஜ்ஜியம் நடத்தி வருவது தெரிய வந்துள்ளது.
அண்மையில் அயல்நாட்டு உளவு நிறுவனம் தாவூத் இப்ராஹிம் துபாயைச் சேர்ந்த தனது கூட்டாளி ஒருவரிடம் போனில் பேசியதை டேப் செய்துள்ளது.
அதில் தாவூத், `நானே நீதிமன்றம்... நானே நீதிபதி; எனக்கு எந்த நீதிமன்றமும் தேவையில்லை!` என பேசியது பதிவாகி உள்ளது. துபாயில் தனது ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களை கவனித்து வரும் முக்கிய கூட்டாளிகளான ஜாவேத் மற்றும் பாகிஸ்தானில் செல்வாக்கு மிக்க நபர் ஒருவரின் மகன் யாசீர் ஆகியோருடன் பேசுகையிலேயே தாவூத் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து இந்திய அரசு எச்சரிக்கையடைந்துள்ளது.வருகிற ஜனவரி 26 ஆம் தேதி இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா விடம் இந்த டேப் முழுவதையும் கொடுத்து, தாவூதைப் பிடிக்க உதவிட இந்திய தரப்பில் வலியுறுத்தப்படும் என்று கூறப் படுகிறது.
தாதா தாவூத் பாகிஸ்தானின் கராச்சியில்தான் பதுங்கி உள்ளார். பாகிஸ்தான் அரசும், ராணுவமும் தாவூத் பதுங்கி இருப்பதற்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்துள்ளது. தாவூதை ஒப்படைக்க இந்தியா பல தடவை வேண்டுகோள் விடுத்த போதும் பாகிஸ்தான் மறுத்து வருகிறது.
பாகிஸ்தானில் இருக்கும் தாவூத் இப்ராகிம், அங்கிருந்தபடியே இந்தியாவுக்கு எதிராக நாசவேலை செய்யும் தீவிரவாதிகளுக்கு உதவி செய்வதும், லஷ்கர்– இ–தொய்பா இயக்கத்துக்கு பல நூறு கோடி ரூபாய்களை கொடுத்துள்ளதும் கூடுதல் அதிர்ச்சித் தகவல்.
அதனால் தவூதைக் கொல்ல இந்தியா சில தடவை ஈடுபட்டது. இதற்காக கமாண்டோ படை வீரர்கள் கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்குள் ஊடுருவி தாவூத்தை நெருங்கிவிட்டனர். ஆனால் கடைசி நிமிடத்தில் அந்த திட்டம் மறைமுக உத்தரவு ஒன்றால் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் தாவூத் இப்ராஹிம் நகர்வை இந்திய உளவுத்துறையும், மேற்கத்திய உளவுத்துறையினரும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இதன் காரணமாக இந்த வாரம் துபாயில் உள்ள ஒருவனிடம் தாவூத் இப்ராகிம் போனில் பேசியதை உளவுத்துறையினர் பதிவு செய்துள்ளனர்.
அதில் தாவூத் இப்ராகிம், கராச்சி புறநகரான கிளிப்டன் பகுதியில் இருப்பது தெரிய வந்தது. மேற்கத்திய நாடுகளின் உளவுத்துறை இதை கண்டு பிடித்துள்ளது. 60 வயதான தாவூத், இருந்த இடத்தில் இருந்தே அரபு நாடுகள், மற்றும் இந்தியாவில் நிழல் உலக சாம்ராஜியம் நடத்தி வருகிறார் என்பது மீண்டும் உறுதிபடுத்தப் பட்டுள்ளது.

No comments:
Post a Comment