Sunday, December 28, 2014

நயன்தாராவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘எதிர்நீச்சல்’ படத்தில் நயன்தாரா ஒரு பாடலுக்கு தனுஷுடன் இணைந்து நடனமாடியிருந்தார். தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த இப்படத்தில் நட்புக்காக நயன்தாரா நடனமாடியிருந்ததாக கூறப்பட்டது. 

இந்நிலையில், தனுஷ் தனது சொந்த நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ‘போடா போடி’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. தனுஷும், சிவகார்த்திகேயனும் சினிமாவையும் தாண்டி நல்ல நண்பர்களாக பழகி வருகின்றனர். அவருக்காகத்தான் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்று கூறப்பட்டாலும், தனது படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய நயன்தாராவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாகவே இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக கூறப்படுகிறது. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 


No comments:

Post a Comment