Saturday, December 27, 2014

கமல் டூப்புடன் விஷால்

ஒரே மாதிரி 7 பேர் இருப்பார்கள் என்று சொல்வதுண்டு. அச்சு அசல் கமலைப்போன்று தோற்றம் கொண்டவரை சமீபத்தில் விஷால் பார்த்தார். 

சமீபத்தில் ஆம்பள படப்பிடிப்புக்காக துபாய் சென்றார் விஷால். சிலர் அங்கு அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

தொப்பி அணிந்து. தாடி, மீசையுடன் ஒருவர் வருவதை கண்டதும் ஆச்சரியம் அடைந்தார். தசாவதாரம் கமல்தான் மாறுவேடத்தில் வந்துவிட்டாரோ என்று நினைத்த விஷால் ஒரு நிமிடம் அவரை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார். 

பிறகு அவரை அருகில் அழைத்து நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். கமலைப்போலவே ஒரு நபரை சந்தித்ததை தனது இணைய தள பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டார் விஷால்.

No comments:

Post a Comment