பேஸ்புக் வாடிக்கையாளர்களின் முகநூலில் 2014 ஆம் ஆண்டில் வந்த பதிவுகளை நினைவுபடுத்தும் விதமாக 'பின் நோக்கிய நினைவுகள்' என்ற பெயரிட்டு வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆண்டில் வந்த பதிவுகளை அனுப்பியது.
இதில் நண்பர்களையும், குடும்ப உறுப்பினர்களையும், வீடுகளை இழந்தவர்களையும் காயப்படுத்துவது போல், அவர்கள் தொடர்பான பதிவுகளை நினைவுபடுதுவதாக 'பின் நோக்கிய நினைவுகள்' அமைந்துவிட்டது. தனது இந்த தவறான செயலுக்கு ஃபேஸ்புக் தனது முகநூல் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது.
எல்லோருக்கும் ஆண்டு முழுவதும் நல்ல சம்பவங்கள் மட்டுமே நடக்க வாய்ப்பில்லை. சில எதிர்பாராத மரணங்களும், இழப்புகளும் நிகழ்ந்து விடுவது உண்டு. இழப்புகளை மறக்க விரும்பவே அனைவரும் நினைப்பார்கள். ஆனால் 'உங்கள் பின் நோக்கிய நினைவுகளை காண வேண்டுமா?' என்ற பேஸ்புக்கின் தொடர்ச்சியான நினைவூட்டல்களால் வாடிக்கையாளர்கள் இதை பார்க்காமல் தவிர்ப்பதும் கடினமானது.
இப்படித்தான், அமெரிக்காவை சேர்ந்த எரிக் மேயர், இந்த வருடத்தின் தொடக்கத்தில் மூளை புற்றுநோயால் இறந்த தனது மகளின் புகைப்படத்தை அவரது 'பின் நோக்கிய நினைவுகளில்' பார்த்தது கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். மேலும் அதன் டேக் லைனில் இது ஒரு பெருமையான ஆண்டு என்று வேறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாதிப்பை அவர் ”தவறுதலான வழிமுறையின் கொடுமை” என்ற தலைப்பில் தனது வலைப்பதிவில் ஒரு கட்டுரையாக வெளியிட்டுள்ளார்.
தனது கட்டுரையில் மருத்துவமனையில் நோயாளியாகக் கிடந்த தருணத்தை, விவாகரத்து ஆனதை, வேலை போனதை இன்னும் இது போன்ற நூற்றுக்கணக்கான கொடுமைகளை யார் மறுபடியும் பார்க்க விரும்புவார் என்று கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் தனது இளைய மகளின் மரணத்தை நினைவு படுத்தியதன் மூலம் ஃபேஸ்புக் தன் மீது வலியை திணித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய ஃபேஸ்புக்கின் தயாரிப்பு மேலாளர் ஜோனதன் கெல்லர் “இந்த சேவை நிறைய பேருக்கு அற்புதமான ஒரு அனுபவமாக இருந்தது. ஆனால் எரிக் மேயர் விவகாரத்தில் மகிழ்ச்சிக்கு பதிலாக நாங்கள் வருத்தத்தையே கொடுத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது” என்று கூறியதுடன் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

No comments:
Post a Comment