Monday, December 29, 2014

விஜய்யோடு இணையும் சசிகுமார்

சிம்புதேவன் இயக்கத்தில் நடித்துவரும் விஜய் விரைவில் சசிகுமார் இயக்கத்தில் நடிக்கயிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.

விஜய்யை இயக்குகிறவர் பட்டியலில் நீண்ட காலமாக சசிகுமார் இருக்கிறார். ஆனால் எப்போது இந்த கூட்டணி அமையும்? ஒருவரிடமும் உறுதியான பதில் இல்லை.

சிம்புதேவன் படம் முடிந்ததும் அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து அவர் சசிகுமார் இயக்கத்தில் நடிக்கலாம் என்கிறார்கள். ஏ.ஜி.எஸ் என்டர்டெய்ன்மெண்ட் இவர்கள் இணையும் படத்தை தயாரிக்கும் எனவும் கூறப்படுகிறது.


No comments:

Post a Comment