சூர்யா நடிக்கும் படம் ‘மாஸ்'. வெங்கட் பிரபு இயக்குகிறார். ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். சமீபத்தில் நடந்த இதன் படப்பிடிப்பில் சூர்யா, நயன்தாரா, காமெடி நடிகர் பிரேம்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். செட்டிலிருக்கும் போது பிரேம்ஜி மற்றவர்களை நக்கலடிப்பது வழக்கம். கலாய்க்கிறேன் என கூறியபடி மற்றவர்களை கடுப்பேற்றுவதுதான் பிரேம்ஜி அண்ட் டீமின் வேலை. அவரது குணம் தெரிந்தவர்கள் சிரித்துக் கொண்டே எஸ் ஆகிவிடுவார்கள். ஆனால் அதே பார்முலாவை நயன்தாராவிடம் கையாண்டபோது வாங்கி கட்டிக்கொண்டார் பிரேம்ஜி.அன்றைய தினம் படமாக்க இருக்கும் காட்சிக்கான வசனத்தை மனப்பாடம் செய்வதில் செட்டில் பிசியாக இருந்தாராம் நயன்தாரா. அப்போது அவரை பார்த்து ‘ஆன்ட்டி' என அழைத்த¤ருக்கிறார் பிரேம்ஜி.
அதை சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் லேசாக சிரித்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டார் நயன். பிறகு அவரது பக்கத்தில் வந்த பிரேம்ஜி, ஒவ்வொரு முறை அவரிடம் பேசும்போதும் ஆன்ட்டி என கூறியபடி பேசியிருக்கிறார். பொறுமை இழந்த நயன்தாரா அவரை பார்த்து முறைத்தபடி, ‘என்னை இப்படி அழைப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் மூக்கை உடைத்து விடுவேன்.
இதற்கு மேல் அப்படி என்னை கூப்பிட்டால் நன்றாக இருக்காது. அவ்வளவுதான்' என்று உரத்த குரலில் கூறினார். இதை கேட்டதும் செட்டில் இருந்தவர்கள் ஆடிப்போனார்கள். படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது. சில நிமிடங்களுக்கு செட்டில் சத்தமே இல்லை. நயன்தாரா போட்ட போடில் ஆடிப்போன பிரேம்ஜி மீண்டும் அவர் கண்ணில் படாமல் ஓடி ஒளிந்தாராம்.

No comments:
Post a Comment