குஜராத் தலைநகர் அகமதாபாத் நகரில் அமீர் கான் நடிப்பில் வெளியாகியுள்ள பிகே படத்தை திரையிட்ட தியேட்டர்கள் இன்று அடித்து நொறுக்கப்பட்டன.
அமீர் கானின் நடிப்பில் வெளியான ‘பிகே’ திரைப்படம் வெளியான ஒன்பதே நாட்களில் சுமார் 200 கோடி ரூபாய் வசூலை அள்ளியதாகவும், இந்த படத்தை இதே பெயரில் ‘டப்’ செய்து வெளியிடவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த படத்தில் இந்து கடவுள்களை அவமதிப்பதை போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், குஜராத் மாநில தலைநகர் அகமாதாபாத்தில் பிகே படம் ஓடிக்கொண்டிருக்கும் 2 சினிமா தியேட்டர்கள் மீது சுமார் 20 பேர் இன்று தாக்குதல் நடத்தினர்.
காலை 10 மணியளவில் இங்குள்ள ஆசிரமம் சாலையில் இருக்கும் சிட்டி கோல்ட், ஷிவ் ஆகிய தியேட்டர்களுக்குள் புகுந்த இந்த கும்பலை சேர்ந்தவர்கள் டிக்கட் கவுண்ட்டர்களை அடித்து நொறுக்கி, படத்தின் போஸ்ட்டர்களையும் கிழித்தெறிந்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் வருவதற்குள் அந்த கும்பல் தப்பியோடி விட்டது.
இந்த தாக்குதலுக்கு பஜ்ரங் தளம் கட்சி பொறுப்பேற்றுள்ளது. பிகே படத்தை திரையிடுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அகமாதாபாத் நகர பஜ்ரங் தளம் கட்சி தலைவர் ஜுவாலா மேத்தா எச்சரித்துள்ளார்.

No comments:
Post a Comment