‘‘நான் ஒரு நடிகை என்பதால் என்னை ஒரு பெண்ணாக பலரும் மதிப்பதில்லை..” என்று விரக்தியாக பேசுகிறார், அனுஷ்கா சர்மா.
‘‘என்னைப் பற்றிய எல்லா விஷயங்களையும் எல்லோரும் அறிய வேண்டுமா என்ன? எனக்கென்று எந்த தனிப்பட்ட விஷயங்களும் இருக்கக்கூடாதா? என் வீட்டை இன்னொருவர் உற்றுப்பார்ப்பதுகூட எனக்கு பிடிக்காது. அப்படிப்பட்ட நான் எனது அந்தரங்கம் அனைத்தையும் வெளிப்படுத்தவேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்’’ என்று ஆவேசமாக பொரிந்து தள்ளுகிறார்.
சிறிது நேரத்திலே அவரது ஆவேசம் அடங்கிவிடுகிறது. இயல்பு நிலைக்கு வந்து மக்களின் மனோபாவத்தை புரிந்தவராக தணிந்து பேசுகிறார்..
‘‘நான் விளம்பர படங்களில் நடித்ததில் கிடைத்த வருமானத்தில்தான் புதிய வீட்டை வாங்கினேன். நமது உலகமே நுகர்வுமயத்தால் ஆனது. நீங்கள் எதை வேண்டுமானாலும் பாருங்கள், அது உங்களுக்கு ஒரு விளம்பர படத்தைதான் ஞாபகப்படுத்தும். விளம்பரங்கள் இன்றி இங்கே எதுவும் நடப்பதில்லை. விளம்பர உலகில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்...’’ என்று இயல்பாக பேசுகிறவர், மீண்டும் சூடாகிறார்!
‘‘ஒரு நடிகரிடம் போய், ‘நீங்கள் என்ன பிராண்ட் சிகரெட் புகைக்கிறீர்கள்?’ என்று கேட்கிறார்கள். அது அவரது தனிப்பட்ட உரிமை. அதில் போய் ஏன் கேள்வி கேட்கவேண்டும்! சாதாரண ஆட்கள் புகைப்பிடித்தால் அவர்களிடம் போய் யாரும் அதுபற்றி கேள்வி கேட்பதில்லை.
இதை இன்னொரு கோணத்திலும் பார்க்கவேண்டும். பிரபல நடிகர் புகைக்கும் சிகரெட்டைப் பார்த்து சாதாரண ஆட்களும் அதே சிகரெட்டைப் புகைக்கிறார்கள். மக்களுக்கு மற்றவர்களை அப்படியே காப்பியடிப்பது எளிதாக இருக்கிறது. நாம் கண்ணை மூடிக்கொண்டு இன்னொருவரின் வாழ்க்கையைப் பின்பற்றுவது மடத்தனமானது! இப்படி காப்பியடிக்கும் கலாசாரத்தில் இருந்து நாம் மீளவேண்டும்.
இந்தியாவில் சினிமாவை பிரபலப்படுத்தும் விதம் கூட எனக்குப் பிடிக்கவில்லை. இங்கே, எல்லாவற்றையும், எப்படியாவது ‘மார்க்கெட்’ பண்ண வேண்டும் என்று அலைகிறார்கள்’’ என்று அனுஷ்கா எரிச்சல் அடைகிறார்.
‘‘என்னிடம் ஒருவர், ‘உங்களை உங்களுக்கு சரியாக மார்க்கெட் பண்ணத் தெரியவில்லை’ என்று கவலையோடு குறிப்பிட்டார். ‘என்னை நானே மார்க்கெட் செய்வதா? அப்படின்னா என்ன அர்த்தம்?’ என்று நான் திருப்பிக் கேட்டேன். அவர் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார்.
நடிப்பது என் தொழில். அதை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதற்குரிய மரியாதை மட்டும் எனக்கு கிடைத்தால்போதும். அதை தவிர்த்து என்னை எல்லோரும் ஒரு பிரபலமாக கொண்டாடவேண்டும் என்று நான் விரும்பவில்லை. நடிகை என்றாலும் நானும் ஒரு சாதாரண பெண்தான். ஓட்டலுக்கு சாப்பிட போனால்கூட பலரும் ஓடிவந்து என்னோடு நின்று போட்டோ எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். நான் அதை விரும்புவதில்லை’’ என்கிறார், அனுஷ்கா.
‘‘என்னிடம் யாராவது வந்து, ‘நான் உங்களுடன் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளட்டுமா?’ என்று கேட்டாலே என்னால் அந்த இடத்தில் இயல்பாக இருக்க முடியாது. யாராவது என்னைப் பார்த்து காமிராவை கையில் எடுக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டே இருப்பேன்’’ என்று தனது சங்கடத்தைச் சொல்கிறார் அனுஷ்கா.
கடைசியாக இவரது காதலரான கிரிக்கெட் வீரர் விராட் கோலி பற்றிக் கேட்டால், ‘‘பாருங்கள்...! ஒருவர், இன்னொருவரோடு பழகுவார். ‘டேட்டிங்’ போவார். முத்தமிடுவார்... இதெல்லாம் வாழ்க்கையில் இயல்பான விஷயங்கள். இதையெல்லாம் பெரிதுபடுத்தி கூச்சலிடுவதுதான் அசிங்கம்.
எங்களைப் போன்ற நடிகர், நடிகைகளைப் பற்றி வெளியே கன்னாபின்னாவென்று செய்திகள் வெளிவருவதால்தான் நாங்கள் ரகசியமாக நடந்துகொள்கிறோம். நான் எனது வேலையை முறையாகச் செய்கிறேன், மற்றவர்களிடம் நல்லவிதமாக நடக்கிறேன்.
மற்றபடி நான் யாருடன் பழகினால், எங்கே போனால் உங்களுக்கு என்ன பிரச்சினை? நான் யாரை கல்யாணம் செய்யப் போகிறேன் அல்லது கல்யாணம் செய்யாமல் இருக்கப் போகிறேன் என்று உங்களுக்கு ஏன் கவலை? நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லப் போவதில்லை. அப்படிச் சொன்னால், அது ஒரு சுற்றுச் சுற்றி என்னிடமே மோசமாக வந்து சேரும்’’ –சூடு மாறாமலே முடிக்கிறார், அனுஷ்கா சர்மா.

No comments:
Post a Comment