காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு கோவில் கட்ட லக்னோவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அங்கு பூமி பூஜை செய்ய இந்து மகாசபை முடிவு செய்துள்ளது.
கடந்த 1948ஆம் ஆண்டு, டெல்லியில் மகாத்மா காந்தியை, நாதுராம் கோட்சே (39) என்ற ஆர்.எஸ்.எஸ். இந்து மகாசபா உறுப்பினர் சுட்டுக் கொன்றார். இதையடுத்து, கோட்சேவுக்கு 1949ஆம் ஆண்டு நவம்பர் 8ஆதேதி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, ஒரு வாரத்தில் அந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், கோட்சேவுக்கு கோவில் கட்டப்போவதாக இந்து மகா சபை அறிவித்திருந்தது. மேலும், இதற்காக இடம் தேர்வு செய்யும் பணி உத்தரப்பிரதேச மாநிலம் மீரட், சீதாபூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. அதன்படி, லக்னோ புறநகர் பகுதியில் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக இந்து மகாசபை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் முன்னாகுமார் சர்மா கூறுகையில், ''லக்னோ புறநகர், ஹைதர் கஞ்ச் என்ற இடத்தில் கோட்சேவுக்கு கோவில் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை அந்தப் பகுதி மக்கள் தாமாகவே முன் வந்து கொடுத்துள்ளனர். விரைவில் அங்கு பூமி பூஜை நடைபெறும்.
மேலும், வருகிற ஜனவரி 30 ஆம் தேதிக்குள் இங்கு கோட்சேயின் மார்பளவு சிலை நிறுவப்படும். அன்றைய தினம் கோட்சேயின் தியாகத்தை போற்றும் வகையில் விழா கொண்டாடப்படும்'' என்றார்.

No comments:
Post a Comment