விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Friday, December 26, 2014

    லிங்கா மூலம் கோடிகளைக் குவித்த தியேட்டர்காரர்கள் மோசடி கணக்கு காட்டியது அம்பலம்!

    லிங்கா படத்தில் பல கோடிகளை முதல் மூன்று நாட்களிலேயே குவித்துவிட்ட தியேட்டர்காரர்கள், குறைவான வசூல் கணக்குக் காட்டியதை கையும் களவுமாகப் பிடித்துள்ளனர் வணிக வரித் துறையினர்.

     ரஜினி பட விஷயத்தில் ஒருவித பகல் கொள்ளையே நடத்துகிறார்கள் தியேட்டர்காரர்களும் விநியோகஸ்தர்களும் என்றால் மிகையல்ல. 

    படத்துக்கு எவ்வளவு வசூல் குவிந்தாலும், அதை வெளியில் காட்டாமல், போலியான கணக்குகளைத் தயாரித்துக் காட்டி நஷ்டம் என்று கூறி வரி ஏய்ப்பு செய்கிறார்கள். 

    இதே கணக்கை பின்னர் மீடியாவிலும் காட்டி தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது, என ரஜினியும் தயாரிப்பாளர்களும் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று கோரிக்கை வைப்பதும் தொடர்கிறது. 

    ரஜினி படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சி என்பது எழுதப்பட்ட சட்டமாகும். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக இந்த வழக்கம் இருந்து வருகிறது. படம் வெளியாகும் நேரமான 11.30-க்கு முன்பே மூன்று சிறப்புக் காட்சிகள் போடுவார்கள் பெரும்பாலான அரங்குகளில். 

    சென்னை போன்ற பெரு நகரங்களும் இதற்கு விலக்கல்ல. இந்த முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டின் விலை, ஒரிஜினல் டிக்கெட் விலையைப் போல பத்து மடங்கு இருக்கும். 

    முதல் வரிசை இருக்கையிலிருந்து பால்கனி இருக்கை வரை அனைத்துக்கும் ஒரே கட்டணம். சிவாஜி படத்தின்போது ஒரு டிக்கெட் மூவாயிரம் வரை விலை போனது. இந்த மூன்று காட்சிகள் தவிர்த்த அன்றைய நாளின் பிற காட்சிகளுக்கு சற்று குறைந்த விலையில், ஆனால் ப்ளாட்டாக ஒரே ரேட்டில் விற்பது தியேட்டர்காரர்கள் வழக்கம்.

     அதாவது தியேட்டரே டிக்கெட்டை ப்ளாக்கில் விற்கும். சிறப்பு டிக்கெட் என அச்சடித்துக் கொடுப்பவர்கள், அந்த டிக்கெட்டை கணக்கில் காட்டுவதே இல்லை. முதல் நாளில் மட்டுமே பல லட்சங்களை இந்த காட்சிகள் மூலம் பார்த்துவிடுகின்றன தியேட்டர்கள். 

    முதல் நாள் மட்டும் எட்டு காட்சிகள் ஓட்டும் இவர்கள், அடுத்த இரு தினங்களுக்கும் தலா ஆறு காட்சிகள் ஓட்டுகிறார்கள். இவற்றில் தினசரி நான்கு காட்சிகளுக்கு மட்டுமே கணக்கு காட்டுகிறார்கள். 

    அந்த நான்கு காட்சிகளுக்கும் இவர்கள் கொடுக்கும் டிக்கெட் கணக்கு ரூ 10, ரூ 40, ரூ 50 மட்டுமே. ரசிகர்களிடம் ஆயிரங்களில் வசூலித்துவிட்டு வெறும் அஞ்சு பத்து கணக்கு காட்டிவிடுகிறார்கள். 

    ஒவ்வொரு தியேட்டரும் ரஜினி படத்தை வெளியிடும்போது, முதல் வாரத்திலேயே மொத்தப் பணத்தையும் எடுத்துவிடுகின்றனர். மீதி நாட்களில் வருவதெல்லாம் போனஸ். 

    ஆனால் இப்படி தாங்கள் சம்பாதித்ததை மட்டும் எந்த தியேட்டர்காரரும், அவர்களுடன் டீலிங் வைத்திருக்கும் விநியோகஸ்தரும் வெளியில் சொல்வதே இல்லை.

     உதாரணமாக 900 இருக்கைகள் கொண்ட ஒற்றைத் திரையரங்கில், லிங்காவுக்கு முதல் நாள் நடத்தும் 8 ஷோக்களுக்கும் சராசரியாக டிக்கெட் விலை ரூ 500 என்று வைத்துக் கொண்டால் கூட, அன்று மட்டுமே ரூ 36 லட்சம் வசூலாகியிருக்கிறது. 

    இது கற்பனைக் கணக்கல்ல... சென்னையின் பிரதான பகுதியில் உள்ள ஒரு அரங்கில் இந்த விலைக்குத்தான் டிக்கெட் விற்றார்கள். ரசிகர்களும் அடித்துப் பிடித்து வாங்கினார்கள். 

    திருச்சி, தஞ்சை, திருப்பூர், கோவை, மதுரை என பல ஊர்களிலும் நள்ளிரவுதான் முதல் காட்சி ஆரம்பமானது, குறைந்தபட்சம் ரூ 300லிருந்து 1000 வரை டிக்கெட் விலை இருந்தது. 

    முதல் 3 நாட்கள் அத்தனை அரங்குகளும் ஹவுஸ்புல்தான். அதன் பின்னர் வந்த 5 நாட்களிலும் சராசரியாக 60 முதல் 70 சதவீத பார்வையாளர்கள் இந்தப் படத்துக்கு வந்திருக்கிறார்கள். 

    சென்னை நகரைப் பொறுத்தவரை, இப்போது வரை நிறைந்த கூட்டத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது லிங்கா. 

    சத்யம், லக்ஸ் போன்ற மால்கள் தவிர்த்து, சில மால்களில் இந்தப் படத்துக்கான டிக்கெட்டுகளை இருமடங்கு அதாவது ரூ 250 வைத்துதான் விற்பனை செய்தனர். ரூ 120 டிக்கெட்டுக்கு என்றும் ரூ 130 ஸ்நாக்ஸுக்கு என்று கூறியே விற்பனை செய்தனர் முதல் மூன்று நாட்களும். 

    இதற்கான கணக்குகளை முறைப்படி தந்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான். இத்தனைக்கும் லிங்கா படத்துக்கு 100 சதவீதம் கேளிக்கை வரி விலக்கு வேறு. 

    அதன் பலன் முழுவதும் தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கையும் களவுமாகப் பிடித்த கர்நாடகா இப்படி வசூலில் பெரும் மோசடிக் கணக்கைக் காட்டியுள்ள தியேட்டர்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் குறித்து கர்நாடக மாநில வணிக வரித்துறை சமீபத்தில் பெரும் உண்மையை வெளியிட்டுள்ளது. 

    லிங்கா படம் வெளியான முதல் இரு தினங்களுக்கு தங்கள் அலுவலகத்திலிருந்து 33 அதிகாரிகளை படம் வெளியான பல அரங்குகளுக்கும் அனுப்பி படம் பார்க்க வைத்தது. 

    இரண்டு நாட்களில் மொத்தம் 150 காட்சிகள் பார்த்துள்ளனர் அந்த அலுவலர்கள். அவர்கள் சோதனையிட்டதில், ஒரு பெரிய தியேட்டர் குழுமம் கொடுத்த கணக்கில், லிங்காவுக்கு கூட்டமே வரவில்லை என்றும், குறைந்த அளவே டிக்கெட் விற்பனையானது, 

    அதுவும் மிகக் குறைந்த விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டது என்றும் கூறப்பட்டிருந்ததாம். ஆனால் லிங்காவுக்கு எவ்வளவு கூட்டம் அந்த அரங்குக்கு வந்தது என்பதை கண்ணால் கண்ட அதிகாரிகள், அந்த இரு தினங்களில் மட்டும் லிங்காவுக்கு வசூலான தொகையில் ரூ 45 லட்சத்தை கணக்கு காட்டாமல் தியேட்டர் நிர்வாகம் மறைத்ததை அம்பலமாக்கியுள்ளனர்.

     டிகே ரவி என்ற அதிகாரியின் தலைமையில் சாதாரண சினிமா ரசிகர்களைப் போல திரையரங்குகளுக்குப் போய் இந்த உண்மையை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இதுபோல மொத்த அரங்குகளின் கணக்கையும் அவர்கள் கேட்டுள்ளனர்.

     தமிழகத்திலும் இதுபோல நடந்திருந்தால், லிங்கா விஷயத்தில் தியேட்டர்காரர்கள் செய்துள்ள முறைகேடுகள் அம்பலத்துக்கு வந்திருக்குமே!


    Posted by விழியே பேசு... at 10:38 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா, செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ▼  2014 (1155)
    • ▼  December (465)
      • 2014 ஆம் ஆண்டில் தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள் - ...
      • 2014-ன் சிறந்த திரைப் படைப்புகள்
      • இமான் இசையில் பாட்டு பாடிய அனிருத்
      • டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி: சில சுவையான புள்ளி விவ...
      • பிளாஷ்பேக் 2014: காதலை முறித்து.. கல்யாண உறவை முடி...
      • ஷமிதாப் படத்தின் முதல் பாடல்... ரசிகர்கள் அமோக வரவ...
      • அஞ்சாதே 2-ம் பாகத்தை உருவாக்கும் மிஷ்கின்?
      • டோணி திடீர் ஓய்வின் பின்னணியில் பல மர்மங்கள்... வி...
      • ஏர் ஏசியா நிறுவனத்திற்கு அடுத்த அதிர்ச்சி: புல்வெள...
      • ஐ படத்தில் எத்தனை கேரக்டர்கள்? : விக்ரம் பதில்
      • உத்தமவில்லன் டிரெய்லர் எப்போது : கமலஹாசன் பேட்டி
      • நூற்றுக்கும் அதிகமான நகரங்களில் இந்தி லிங்கா... வர...
      • ஐ படக் கதையை முதலில் சொன்னது யாருக்கு ! - ஷங்கர் வ...
      • அண்மை செய்தி : போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிற...
      • ஆன்மிக ரூட்டில் அஜித்! வியக்கும் விவேக்
      • அனுஷ்காவின் ‘காதலும்.. முத்தமும்..’
      • நான் விளையாடிய கேப்டன்களிலேயே டோனி தான் சிறந்த கேப...
      • கமலோடு சேர்ந்து மலேசியா செல்லும் விஜய் எதற்கு...?
      • நடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விம...
      • பொங்கல் ரேசில் இருந்து விலகிய காக்கி சட்டை?
      • போலி என்கவுன்டர் வழக்கில் இருந்து பா.ஜனதா தலைவர் அ...
      • இலங்கை அரசியலில் இருந்து சல்மான் கானை வெளியேறச் சொ...
      • தோனியின் மவுனமான வெற்றி! ஒரு பார்வை !!
      • மேக்கப் இல்லாமல் பார்க்க முடியாது: சார்மி
      • கோட்சேவுக்கு கோவில் கட்ட இடம் தேர்வு!
      • அடுத்தடுத்து தனுஷின் இரண்டு படங்கள்!
      • ' சோகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை' : ஏர் ஏசியா விம...
      • சூப்பர் ஸ்டார்வரை ரீச்சான டயலாக் - சந்தானம்
      • செங்கல்பட்டில் கன்னிப் பெண் நிர்வாணமாக நிற்க சொன்ன...
      • அதிக ரன்கள்...சச்சினை முந்தினார் விராட் கோஹ்லி!
      • இளையராஜா இசையில் இரண்டு பாடல்கள் பாடிய நடிகர் ஜீவா
      • நாளை சாவி குலுக்கி ஆண்களைத் தேர்வு செய்யும் பெண்கள...
      • இளையராஜாவுக்கு திமிர், 25 லட்சம் சம்பளம் வாங்குற ச...
      • டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு: கிரிக்கெட்...
      • நேதாஜி மாயமானது பற்றி நீதி விசாரணை? ஆர்.எஸ்.எஸ். உ...
      • ஜாலியன் வாலாபாக் படுகொலையைவிட மோசமானது விசாரணை கமி...
      • மீண்டும் பெங்களூரில் குண்டு வெடிக்கும்... டிவிட்டர...
      • 6½ கோடி ஆண்டு முட்டை, எடை தாங்காமல் இறந்த கழுதை கு...
      • வைரமுத்துவின் நெஞ்சுக்கு நெருக்கமான பாடல்!
      • ஏர்டெல்: இன்டர்நெட் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் வித...
      • ஜனவரியில் திரைக்கு வரும் கவுண்டமணியின் 49 ஓ
      • பெங்களூர் குண்டு வெடிப்பில் பலி: சென்னை பெண் பவானி...
      • மன்னிப்பு கேட்ட ஃபேஸ்புக்
      • மீண்டும் 'மருதநாயகம்' தொடங்குகிறார் கமல்ஹாசன்
      • பிகே படத்தை திரையிட்ட தியேட்டர்கள் இன்று அடித்து ந...
      • நீங்கள் என்னை வெறுப்பதை நான் விரும்புகிறேன்: ஆஸி. ...
      • விஜய்யோடு இணையும் சசிகுமார்
      • அஜீத் படத்தை கிண்டலிடிக்கும் வர்மா
      • தி இண்டர்வியூ திரைப்படம் இணைய வருமானத்தில் சாதனை
      • காதலருடனான அந்தரங்க புகைப்படம் - நடிகையே வெளியிட்டார்
      • டோனி, ராய்லட்சுமி காதல்: 'டோனிக்கு பிறகு வேறு தொடர...
      • என்னை அறிந்தால்.... ரசிகர்களே நடத்தும் இசை வெளியீடு!
      • ராஜபக்சேவுக்கு ஆதரவாக நடிகர் சல்மான்கான் இலங்கையில...
      • வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா-வெங்கட்பிரபு
      • எவனாயிருந்தாலும் வெட்டுவேன்: அஜித், விக்ரமை சீண்டி...
      • தனுஷ், அமிதாப் பச்சனின் 'ஷமிதாப்' -ஆடியோ டிரைலர்!
      • மைசூரின் இரண்டாவது பெரிய அரண்மனையில் விஜய்
      • சென்னை நகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் 15 வயத...
      • புத்தாண்டில் என்னை அறிந்தால் பாடலுடன் அஜித் தரும் ...
      • பிக்பாக்கெட் திருடர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்
      • புத்தகங்களைத் தொடாதீர்கள்! - இயக்குநர் மிஷ்கின்
      • ஹன்சிகாவை டேமேஜ் ஆக்கிய ஆர்யா
      • கோட்சேவுக்கு தமிழகத்தில் சிலை வைக்கும் முயற்சி
      • 400 சீடர்களின் ஆண்மையை பறித்தேனா?: நிரூபித்தால் என...
      • விஜய், அஜித், சூர்யா என யாருமே வேண்டாம்!
      • ஹாலிவுட் எதிர்பார்க்கும் கிறிஸ்மஸ் ஜாக்பாட்
      • பெங்களூரில் குண்டுவெடிப்பு - சென்னை பெண் பலி (அண்ம...
      • மதுரையில் அழிக்கப்பட்ட பொக்கிஷ மலை: சகாயத்தின் வி...
      • பிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரம் பங்கேற்பு
      • நாடு முழுவதும் 1,058 எம்எல்ஏக்கள்: பாஜக-வின் சாதனை
      • நயன்தாராவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் சிவகார்த்திக...
      • மசூதிகளை இடித்து விட்டு கோவில்களைக் கட்ட வேண்டும் ...
      • ரிப்பீட் ரிவிட் இசையமைப்பாளர்கள்!
      • தனுஷுக்கு ஜோடியான சமந்தா!
      • பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பேய் விரட...
      • 155 பயணிகளுடன் நடுவானில்... மீண்டும் ஒரு விமானம் ம...
      • 'இனி உங்க மொபைல்ல எந்நேரமும் சார்ஜ் இருக்கும் !'
      • பிரசாந்த் படத்தில் சிம்பு
      • ‘ஆன்ட்டி என அழைத்தால் மூக்கை உடைப்பேன்’ ; பிரேம்ஜி...
      • கிளு கிளுப்பா - நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன...
      • எங்களை யாரும் பிரிக்க முடியாது! தடைகளைத் தாண்டிய க...
      • `நானே நீதிமன்றம்... நானே நீதிபதி!` - தாவூத் இப்ராகிம்
      • பா.ஜ.க எதிர்க்கும் பிகேயை பாராட்டிய அத்வானி
      • கட்சியில் சேர ரஜினி மறுப்பு! பழிவாங்கும் பா.ஜ.க !!...
      • பிரபல தமிழ் நடிகையின் நிர்வாண படங்கள் இணையத்தில் வ...
      • 'என்னை அறிந்தால்' பாடல்கள் விவரம்...
      • கமல் டூப்புடன் விஷால்
      • சர்வதேச திரைப்பட விழா... குற்றம் கடிதல் படத்திற்கு...
      • 'மைக்' மோகன் கதையில் நடித்த தனுஷ்
      • கே பாலச்சந்தர் இறுதிச் சடங்கு.. வராத அஜீத்!
      • ஆஸ்கர் ஆறுதல்
      • காந்தியை சுட்ட கோட்சேவுக்கு உ.பி.யில் கோயில், சிலை...
      • சன் குழும சி.ஓ.ஓ பாலியல் புகாரில் கைது
      • மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று... லிங்கா ப...
      • லிங்கா மூலம் கோடிகளைக் குவித்த தியேட்டர்காரர்கள் ம...
      • ஆழிப்பேரலையின் அழியாத சோகச்சுவடுகள்
      • கிறிஸ்துமஸ் படங்கள் குவிந்தாலும் 'கிங்காக' நிற்கும...
      • கிறிஸ்துமஸ் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து
      • எம்.ஜி.ஆர்: காவிய நாயகன் உருவான கதை
      • 'உத்தம வில்லன்தான்' பாலச்சந்தர் நடித்த கடைசி படம்-...
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.