வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்து சாமி இயக்கியுள்ள படம் கங்காரு. இப்படத்தின் ட்ரெய்லர் எனப்படும் முன்னோட்டம் வெளியீட்டு விழா ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது. முன்னோட்டத்தை கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்.
விழாவில் ஆர்.சுந்தர்ராஜன் பேசும்போது
"இது மாதிரி முன்பும் நடந்துள்ளன. திருமதி பழனிச்சாமி படத்தில் க்ளைமாக்ஸ் ஃபைட் கஷ்டப்பட்டு எடுத்தோம். 70 அடி உயரத்தில் இருந்து ஜீப் ஜம்ப் ஆகிற காட்சி. அவுட்டோரில் எடுத்ததை இங்கு வந்து போட்டுப் பார்த்தோம். அருகிலிருந்த ஹீரோ சத்யராஜ், டூப் நல்லா பண்ணியிருக்காருல்ல என்றார்.
உனக்காக நடித்தவன் அவன். குதித்தவன் அவன்தான் ஒரிஜினல். நீதான் டூப். 25 லட்சம் சம்பளம் வாங்குற நீ டூப். 750 ரூபாய் சம்பளம் வாங்குற அவன்தான் ஹீரோ என்றேன்.
ஒருமுறை இளையராஜா ஏழுபாடல்களைப் போட்டு வைத்துக் கொண்டு, கொடுத்தால் 7 பாடல்களையும் ஒரே படத்துக்குத்தான் கொடுப்பேன் என்றார் பிடிவாதமாக. பாலு மகேந்திரா போல பலரும் தன் படத்தில் நாலு சீக்வென்ஸ்தான் உள்ளன. 4 பாடல் போதும் என்று கேட்டார்கள். அவர் கொடுக்க மறுத்தார்.
இசையமைப்பாளருக்கே இவ்வளவு திமிர் இருந்தால் எழுத்தாளர் எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும். அப்படி என்ன பாட்டு என்று நினைத்து போய் கேட்டேன். நானே அந்த ஏழையும் வாங்கினேன். பயன்படுத்தினேன். அந்தப் படம்தான் வைதேகி காத்திருந்தாள். இதுதான் வித்தை திமிர். தயாரிப்பாளருக்கு என்றைக்கு திமிர் வருகிறதோ அன்றுதான் சினிமா உருப்படும். தயாரிப்பாளர் என்கிற திமிர் இல்லாவிட்டால் ஒற்றுமை இல்லாவிட்டால் உங்களை யாரும் மதிக்க மாட்டார்கள். காப்பாற்ற முடியாது" என்றார்.
விழாவில் நாயகன் அர்ஜுனா, நாயகி பிரியங்கா, நடிகை கோமல்சர்மா, தம்பிராமையா, வெற்றிக் குமரன், இயக்குநர்கள் கே.எஸ். அதியமான், ஜெகன், வேல்முருகன், கேபிள்சங்கர், எடிட்டர் மணி, தயாரிப்பாளர்கள் டி.சிவா, பி.எல். தேனப்பன், கரு. நாகராஜன். ராதா கிருஷ்ணன், ஒளிப்பதிவாளர் ராஜரத்னம் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள். வெளியூர் சென்றிருந்த நடிகை நமிதா நிறைவாக வந்து வாழ்த்திவிட்டு சென்றார்.

No comments:
Post a Comment